ஸ்ரீசங்கர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஸ்ரீசங்கர் (இறப்பு: 20 சனவரி 1980) இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர். மஞ்சள் குங்குமம் (1970) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[1]

யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீசங்கரின் இயற்பெயர் வி. வைத்திலிங்கம். தேயிலைப் பரிசோதகராகப் பணியாற்றியவர்.[1] இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்து திரைப்படங்களிலும், சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார்.[2]

அந்தனி ஜீவாவின் முள்ளில் ரோஜா நாடகத்தில் முதல் தடவையாக நடித்தார்.[1] பின்னர் பல மேடை நாடகங்களில் நடித்தார். "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார்.[2] கொள்ளைக்காரன் நாடகத்தை மேடையேற்றிய போது பெரும் நட்டம் அடைந்தார்.[1]

பட்டங்கள்

கலையரசு சொர்ணலிங்கம் இவருக்கு "கலைவேந்தன்" என்ற பட்டத்தை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கிக் கௌரவித்தார்.[1]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 நாடகத்திற்காகத் தொழிலை விட்டவர் நடிகர் ஸ்ரீசங்கர், வீரகேசரி, 17 திசம்பர் 2011
  2. 2.0 2.1 தம்பிஐயா தேவதாஸ். "இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை". http://noolaham.net/project/04/379/379.htm. பார்த்த நாள்: 15 மார்ச் 2014. 
"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீசங்கர்&oldid=20703" இருந்து மீள்விக்கப்பட்டது