அந்தனி ஜீவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அந்தனி ஜீவா
Antony jeevaa1a.jpg
முழுப்பெயர் அந்தனி ஜீவா
பிறப்பு மே 26, 1944
அறியப்படுவது ஈழத்து மலையக
எழுத்தாளர்

அந்தனி ஜீவா (பிறப்பு: மே 26, 1944) ஈழத்தின் மலையக எழுத்தாளர்களில் ஒருவர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வருபவர். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர். மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்து வருகிறார்.

இவர் தனது அநுபவங்களை ஜீவநதி என்ற சிற்றிதழில் ஒரு வானம்பாடியின் கதை என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார்.

இவரது நூல்கள்

  • அ.ந.க ஒரு சகாப்தம்
  • அன்னை இந்திரா
  • அமைதி கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது
  • ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
  • இவர்கள் வித்தியாசமானவர்கள்
  • ஈழத்தில் தமிழ் நாடகம்
  • ஒரு வானம்பாடியின் கதை (தன் கதை, 2014)
  • கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
  • காந்தி நடேசய்யர்
  • குறிஞ்சிக் குயில்கள்
  • குறும் பூக்கள்
  • சிறகு விரிந்த காலம்
  • சுவாமி விபுலாநந்தர்
  • திருந்திய அசோகன் (2014)
  • நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்
  • பார்வையின் பதிவுகள்
  • மலையக மாணிக்கங்கள்
  • மலையகத் தொழிற்சங்க வரலாறு
  • மலையகமும் இலக்கியமும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அந்தனி_ஜீவா&oldid=2431" இருந்து மீள்விக்கப்பட்டது