ஸ்டார் (2024 திரைப்படம்)
ஸ்டார் | |
---|---|
பட வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | இளன் |
கதை | பி. வி. எஸ். என். பிரசாத் ஸ்ரீநிதி சாகர் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எழில் அரசு கே |
படத்தொகுப்பு | பிரதீப் இ. ராகவ் |
கலையகம் |
|
வெளியீடு | 10 மே 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மதிப்பீடு. ₹12 கோடி[1] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹20 கோடி[2] |
ஸ்டார் (Star) என்பது இயக்குநர் இளன் எழுதி இயக்கிய தமிழ் மொழியில் 2024இல் வெளியான காதல் நாடகத் திரைப்படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.[3] இதில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோருடன் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகராக வேண்டும் என்ற தனது கனவைப் பின்தொடர்ந்து பல்வேறு தடைகளைச் சந்திக்கும் கலை என்ற இளைஞனைப் பற்றி இந்தப் படம் கூறுகிறது.
கதைச் சுருக்கம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கலை என்பவனுக்கு திரையுலகில் ஒரு நடிகனாக வர வேண்டும் என்பது மட்டுமே அவனது ஆசை. ஒரு புகைப்படக் கலைஞரான அவனது அவனது தந்தை பாண்டியன் அவனது கனவுகளுக்கு துணையாக நிற்கிறார். கலை தனது லட்சியங்களை அடைந்து வெள்ளித்திரையில் தன்னை நிரூபித்தானா? என்பதே படத்தின் கதை.[4]
தயாரிப்பு
ஆரம்பத்தில், ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[5] ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக கவின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6] இந்த படம் ஆகஸ்ட் 2023 இல் ‘கவின்ஸ் நெக்ஸ்ட் ’ என்ற தற்காலிக தலைப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.[7] முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி ஜூன் 2023 இல் தொடங்கியது.[8] இது பெரும்பாலும் சென்னையில் படமாக்கப்பட்டு, 2024 ஆண்டு பிப்ரவரியின் நடுப்பகுதியில் முடிக்கப்பட்டது.[9] இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,[10] [11] எழில் அரசூ கே ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
திரைப்படம் 10 மே 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[12][13] கவின் மற்றும் லாலின் நடிப்பு, ஒளிப்பதிவு, யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை ஆகியவற்றிற்காக பாராட்டுகளுடன், விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிலிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[14] [15][16] ஆனால் இளனின் திரைக்கதை விமர்சிக்கப்பட்டது.[17]
வெளியீடு
ஸ்டார் திரைப்படம் 10 மே 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[18][19]
வீட்டு ஊடகங்கள்
டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமங்களை அமேசான் பிரைம் வீடியோவும், செயற்கைக்கோள் உரிமைகளை விஜய் தொலைக்காட்சியும் பெற்றன.[20] இந்த படம் 7 ஜூன் 2024 முதல் மேலதிக ஊடக சேவை தளத்தில் வெளியானது.[21]
மேற்கோள்கள்
- ↑ "Makers Of Kavin's Upcoming Tamil Film Star Increase Budget To Rs 12 Crore: Reports". News18 (in English). 2024-03-12. பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.
- ↑ "'Star' box office collection day 1: A record start for Kavin at the box office". The Times of India. 2024-05-11. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/star-box-office-collection-day-1-a-record-start-for-kavin-at-the-box-office/articleshow/110028443.cms.
- ↑ "Harish Kalyan to collaborate with Elan once again for his next project?". The Times of India. 2019-06-05 இம் மூலத்தில் இருந்து 2023-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230828145837/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/harish-kalyan-to-collaborate-with-elan-once-again-for-his-next-project/articleshow/69662651.cms?from=mdr.
- ↑ Features, C. E. (2024-04-27). "Star trailer: Kavin is a wounded man in pursuit of stardom". Cinema Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
- ↑ "Harish Kalyan to have multiple looks in his movie with Elan and Yuvan". The Times of India. 2020-12-05 இம் மூலத்தில் இருந்து 2023-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230828145837/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/harish-kalyan-to-have-multiple-looks-in-his-movie-with-elan-and-yuvan/articleshow/79583046.cms?from=mdr.
- ↑ "Kavin replaces Harish Kalyan in the much-awaited movie? - Full story - Tamil News". IndiaGlitz.com. 2023-08-07. Archived from the original on 2023-08-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
- ↑ "Harish Kalyan resembles Thalapathi Rajinikanth in his next titled 'Star'". The Times of India. 2020-12-12 இம் மூலத்தில் இருந்து 2023-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230828145838/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/harish-kalyan-resembles-thalapathi-rajinikanth-in-his-next-titled-star/articleshow/79692626.cms?from=mdr.
- ↑ "Dada star Kavin begins shoot for his next". OTTPlay (in English). Archived from the original on 2023-06-14. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
- ↑ "Director Elan satisfied with the progress of Kavin-starrer 'Star'". The Times of India. 2024-01-30 இம் மூலத்தில் இருந்து 2024-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240203184410/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/director-elan-satisfied-with-the-progress-of-kavin-starrer-star/articleshow/107264396.cms?from=mdr.
- ↑ Bureau, The Hindu (2023-08-27). "Kavin replaces Harish Kalyan in Elan-Yuvan Shankar Raja’s film; title to be revealed soon" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 2023-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230828012329/https://www.thehindu.com/entertainment/movies/kavin-replaces-harish-kalyan-in-elan-yuvan-shankar-rajas-film-title-to-be-revealed-soon/article67241511.ece.
- ↑ "'Star' first single 'College Superstar' unveiled from Kavin's film on the occasion of Superstar Rajinikanth's birthday". The Times of India. 2023-12-12 இம் மூலத்தில் இருந்து 2024-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240203175826/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/star-first-single-college-superstar-unveiled-from-kavins-film-on-the-occasion-of-superstar-rajinikanths-birthday/articleshow/105927248.cms?from=mdr.
- ↑ "Kavin's 'STAR' gets a release date in May". The Times of India. 2024-04-19. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kavins-star-gets-a-release-date-in-may/articleshow/109424919.cms.
- ↑ Bureau, The Hindu (2024-04-19). "‘Dada’ fame actor Kavin’s ‘Star’ gets a release date" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/dada-fame-actor-kavins-star-gets-a-release-date/article68083342.ece.
- ↑ "Star Movie Review: A Well-Acted Tale About Nurturing Dreams That Keeps You Invested". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 May 2024.
- ↑ "'Star' Review: Kavin, Elan's coming-of-age film falls short of excellence". இந்தியா டுடே. 10 May 2024.
- ↑ "Star Movie Review: Kavin uplifts this well-intentioned film with sweet surprises that keeps you at bay". OTTplay. 10 May 2024.
- ↑ "'Star' movie review: Kavin and Lal shine, but the film only glitters occasionally". தி இந்து. 10 May 2024.
- ↑ "Kavin's 'STAR' gets a release date in May". The Times of India. 2024-04-19. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kavins-star-gets-a-release-date-in-may/articleshow/109424919.cms.
- ↑ "‘Dada’ fame actor Kavin’s ‘Star’ gets a release date". The Hindu. 2024-04-19. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/movies/dada-fame-actor-kavins-star-gets-a-release-date/article68083342.ece.
- ↑ "Star movie OTT partner revealed - Digital rights of Kavin-starrer have been bagged by THIS streaming platform". OTTplay. 5 March 2024.
- ↑ "Kavin And Aaditi Pohankar Starrer 'Star' Set For Its OTT Premiere". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 June 2024.