வேதாவின் கவிதைகள் (நூல்)
வேதாவின் கவிதைகள் | |
---|---|
நூல் பெயர்: | வேதாவின் கவிதைகள் |
ஆசிரியர்(கள்): | வேதா இலங்காதிலகம் |
வகை: | கவிதை |
துறை: | கவிதைகள் |
இடம்: | மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை தியாகராய நகர், சென்னை -600 017. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 160 |
பதிப்பகர்: | மணிமேகலை பிரசுரம் |
பதிப்பு: | 2003 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
குழந்தைகள் இளையோர் சிறப்புடம் திகழ சிறப்பான ஆலோசனைகளைக் கொண்ட நூலாக 160 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 42 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர்
நூலாசிரியர் வேதா இலங்காதிலகம் உலகம் முழுவதுமுள்ள குறிப்பிடத்தக்க சில தமிழ்ப் பெண் கவிஞர்களுள் ஒருவர். இலங்கையில் பிறந்த இவர் 1987 ஆம் ஆண்டில் வாழ்வாதாரத்திற்காக டென்மார்க் நாட்டிற்குச் சென்று அங்கு ஒரு பாலர் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
அறிமுகம்
பிரான்சிலிருந்து வெளிவரும் ஈழநாடு பாரிஸ் இதழின் முதன்மை ஆசிரியர் எஸ்.எஸ்.குகநாதன் இந்நூலிற்கு அறிமுகம் ஒன்றை அளித்திருக்கிறார்.
அணிந்துரை
இலங்கை யாழ்ப்பாணத்திலிருக்கும் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் சார்பாக இ.ஜெயராஜ் இந்நூலிற்கு எட்டு பக்கங்களில் அணிந்துரையை வழங்கியிருக்கிறார்.
பொருளடக்கம்
நூலாசிரியர் தளிர்கள் எனும் தலைப்பில் 9 கவிதைகளையும், குடும்ப உறவு எனும் தலைப்பில் 12 கவிதைகளையும், தத்துவம் எனும் தலைப்பில் 4 கவிதைகளையும், உணர்வுகள் எனும் தலைப்பின் கீழ் 15 கவிதைகளையும், காதல் + ஏக்கம் எனும் தலைப்பில் 7 கவிதைகளையும், பெண்மை எனும் தலைப்பில் 8 கவிதைகளையும், ஊர் மணம் எனும் தலைப்பில் 12 கவிதைகளையும், நிகழ்வுகள் என்ற தலைப்பில் 16 கவிதைகளையும், வானொலி எனும் தலைப்பில் 6 கவிதைகளையும் , இயற்கை எனும் தலைப்பில் 3 கவிதைகளையும், சுகம் கேட்டல் பிரார்த்தனை எனும் தலைப்பில் 3 கவிதைகளையும், வாழ்த்து - விழா எனும் தலைப்பில் 7 கவிதைகளையும் அளித்திருக்கிறார். இந்நூலில் மொத்தம் 102 கவிதைகளைத் தந்திருக்கிறார். இது தவிர கடைசியாக டென்மார்க் ஒல்போ நகர வானொலியில் இவர் வாசித்த "நானும் என் கவிதையும்" என்கிற கவிதை தரப்பட்டுள்ளது.