வேணுவனப் புராணம்
Jump to navigation
Jump to search
வேணுவனம் என்பது திருநெல்வேலியைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிரம்ப அழகிய தேசிகர் பாடிய நூல் வேணுவனப் புராணம். [1] [2]
பிந்திய பெருநூல்
- 19 ஆம் நூற்றாண்டில் கவிராச நெல்லையப்பன் என்பவர் 6892 விருத்தப்பாடல்கள் கொண்ட வேணுவனப் புராணம் என்னும் நூலைப் பாடினார். இது 1869 ஆம் ஆண்டுப் பதிப்பாக வெளிவந்துள்ளது.
நூல் அமைதி
- நிரம்ப அழகிய தேசிகர் பாடிய வேணுவனப் புராணத்தில் உள்ளவை. 9 சருக்கம். 454 பாடல். வருணனை மிகுதி. எளிய சொற்கள். இதனை இவர் சேது புராணம் பாடுவதற்கு முன்னர் பாடியிருக்கலாம்.
எடுத்துக்காட்டுப் பாடல்கள்
நிரம்ப அழகிய தேசிகர் பாடிய வேணுவனப் புராணத்தில் உள்ளவை. [3]
நெல்லையப்பரைப் போற்றும் பாடல்
- ஏலக் குழல் நீள் வரை மாதுடனே என் கண்கள் களித்திட இன்ப மணக்
- கோலத்துடனே உடன் மேவும் மணக்கோலத்தவனே சரணம் சரணம்
- ஞாலத்தின் மயக்கம் ஒழித்தனையே நாடிப் பரவித் தேடித் திரியும்
- சீலத்தவர்கட்கு வெளிப்படும் மெய்ச் சீலத்தவனே சரணம் சரணம்.
நெல்லைநாதர் திருமேனியைத் தொட்டுச் சிவபூசை செய்யும் சிவ மறையோரை வணங்குதல்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- (காய் 4 / மா தேமா)
- மூண்டபெருந் திருவருளால் அளப்பரிய சிவாகமங்கள் முழுதும் ஓர்ந்து
- பூண்டபெருந் தொண்டினுடன் தமிழ்த்தெய்வப் பாண்டியனார் புகழ்ந்து நின்று
- வேண்டவளர்த்(து) அருள்நெல்லை நாத(ர்)திரு மேனிதனை வியந்து நாளும்
- தீண்டியருச் சனைபுரியும் சிவமறையோர் சரணமலர் சிந்தை செய்வாம்..
பாண்டியனின் நெல்லை
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- (காய் 4 / மா தேமா)
- அரித்தானை அடிய(ர்)பவம் அழித்தானை உரித்தானை அடர்ந்த வேளை
- எரித்தானை புரமெரியச் சிரித்தானை நரித்தானை எவையும் ஆன
- பரித்தானைத் தனிஉலகம் பரித்தாளும் பாண்டியற்குப் பாவித் தானைக்
- தரித்தானை மனத்தினராம் மாணிக்க வாசகர்தன் தலைமேல் கொள்வாம்!
அடிக்குறிப்பு
- ↑ இது 1914 ஆம் ஆண்டுப் பதிப்பாக அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது
- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 106.
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை