வேணாட்டடிகள் திருவிசைப்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள வேணாட்டடிகள் திருவிசைப்பா பத்து விருத்தப் பாடல்கள்ளைக் கொண்டது. இது தோன்றிய காலம் 10 ஆம் நூற்றாண்டு. [1] தில்லையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்கள் இவை.

பாடல் எடுத்துக்காட்டு

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! [2] [3]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005. 
  2. முதல் பாடல்
  3. பத்துப் பாடல்களும் மூலம்