வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
இயக்கம்சக்தி சிதம்பரம்
(திரையில் சி. தினகரன் என்று காட்டபட்டது)
இசைஏ. கே. வாசகன்
நடிப்புமன்சூர் அலி கான்
பொன்னம்பலம்
கீர்த்தனா
வெளியீடு1 மே 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு (Vettu Onnu Thundu Rendu) என்பது 1998ஆம் ஆண்டய தமிழ் திரைப்படம் ஆகும். சக்தி சிதம்பரம் (சி. தினகரன் என்று படத்தில் காட்டப்படுகிறது) இயக்கிய. இப்படத்தில் மன்சூர் அலி கான், பொன்னம்பலம், கீர்த்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ. கே. வாசகன் இசையமைத்த இப்படம் மே 1998இல் வெளிவந்தது.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தின் தயாரிப்பானது 1997 ஆம் ஆண்டு முழுவதும் நடந்தது. முன்னணி நடிகராக மன்சூர் அலிகான் இருந்ததால் அவர் படத்திற்கு முன்னுரிமை அளித்தார்.[1] படத் தயாரிப்பின் போது சாலை விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது.[2]

இசை

ஏ. கே. வாசகன் இசையமைத்த இப்படத்தின்பாடல்கள் 1997 இல் வெளியிடப்பட்டன. பி. உன்னிகிருஷ்ணன், மனோ, சாகுல் ஹமீது உள்ளிட்ட பாடகர்கள் இந்த படத்தின் பாடல்களைப் பாடினர்.[3]

  • புதுவனாம் - பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா
  • பச்சரிசி - வாசகன், பெபி மணி
  • வெட்டு ஒண்ணு - மனோ
  • பொன்னம்மா - உன்னிகிருஷ்ணன்
  • சிலு சிலுக்கும் - யுகேந்திரன், இந்து
  • மூணு முக்கலானா - மனோ

வெளியீடு

1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு திரைப்படத்தை கம்பிவட தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை எதிர்த்து மன்சூர் அலி கான் சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.[4] அவரது இந்த நடவடிக்கையின் விளைவாக கம்பிவட தொலைக்காட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்து திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, புதுச்சேரி முழுவதும் உள்ள திரை அரங்குகளை ஒரு நாள் மூடினார்.[5] பின்னர் அவர் ஆர்லியன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், 2001 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மற்றும் சட்டவிரோதமாக படத்தை ஒளிபரப்பியதற்காக ரூ .5 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டது. 2007 ஆம் ஆண்டில், பதிப்புரிமை மீறிய வழக்கில் அந்த இருவருக்கும் தலா ஆறு மாத சிறைத்தண்டனையும் ரூ மூன்று இலட்சம் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்தது.[6]

குறிப்புகள்