வூ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வூ (Wu, எளிய சீனம்: 吴, மரபு சீனம்: 吳) என்பது ஒரு சீனக் குடும்பப் பெயர். இது சீனத்தில் மக்களுக்கு அதிகமாக இடப்படும் பெயர்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த மக்கட் பெயர்களிலும் வூ என்ற பெயர் காணப்படுகிறது. மேலும் இது கொரியாவிலும் பரவலாகக் காணப்படும் ஒரு பெயராகும்.

மாண்டரின் வகையில் "வூ" என்று உச்சரிக்கப்பட்ட இப்பெயர் கான்டொனீஸ் வகையில் "ங்" என்று ஒலிக்கிறது. கொரிய மொழியில் "ஓ", வியட்நாம் மொழியில் "ஹோ" என்று உச்சரிக்கப்படுகிறது. மாண்டரினிலேயே பல்வேறு பெயர்கள் "வூ" என்றே உச்சரிக்கப்படுகின்றன, ஆனால் அந்த பெயர்களுக்கு வேறு தொனிகளும் பொருட்களும் உள்ளன.

"https://tamilar.wiki/index.php?title=வூ&oldid=29289" இருந்து மீள்விக்கப்பட்டது