வீரவெண்பாமாலை
Jump to navigation
Jump to search
வீரவெண்பாமாலை [1] என்னும் நூலைப் பற்றித் தென்காசிக் கோயில் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. 'குலசேகரப் பாண்டியன் நெல்வேலிப் பெருமாள்' எனப் போற்றப்பபட்ட நெல்வேலி மாறன் வீரச் செயல்களை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.
- புலவர் ஒருவர் இவன்மீது வீரவெண்பாமாலை நூலைப் பாடினார் என்பதைக் குறிப்பிடும் சாசனப் பாடல். [2]
- இந்த அரசன் முடி சூடிய காலம் கி.பி. 1553. [3]
- தென்காசித் திருப்பணி முற்றுப்பெறாது இருந்ததை இவன் முடித்துவைத்தான். [4] [5]
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005. p. 282.
- ↑
ஏடியன் மாலை அணிந்தாலும் வாடும் எனப் புலவோர்
பாடிய வீரவெண்பாமாலையை பொன்னின் பாண்டியன் போர்
தேடிய வேற்செழியன் குலசேகரத் தென்னனைப் போற
சூடிய வேந்தர் உண்டோ ஒரு வேந்தரைச் சொல்லுகிலே. - ↑
ஏறிய சகாப்தம் ஆயிரத்து நானூற்று எழுபஃது இயல் நாலில் ஆண்டு பரிதாபி தனில் மாதம்
தேறிய சித்திரையில் இருபத்து ஒன்பது ஆகும் தேதி இரண்டாம் பக்கம் திங்கள் உரோகினி நாள்
வீறு உயர்ந்த மிதுனத்து நெல்வேலி மாறன் வீர வேள் குலசேகரச் செழியன் என்னும்
ஆறு புனை அகிலேசர் காணியிலே விளங்க அணி மௌலி மரித்தனன் பாரரசர் பணிந்தனரே. - ↑
விண் நாடர் போற்றும் தென்காசிப் பொற் கோபுரம் மீதில் எங்கள்
அண்ணாள்வி செய்த பணி இப்படிக் குறையாய்க் கிடக்க
ஒண்ணாது எனக் கண்டு உயர்ந்த தட்டு ஓங்கும் ஊன்றுவித்தான்
மண் ஆளும் மாழை கன் குலசேகர மன்னவனே - ↑ ஆவணத்தில் உள்ள சில சொற்களின் இவ்விடத்துக்கு ஏற்ற பொருள் விளங்கவில்லை