வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வீரவநல்லூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
பெயர்
பெயர்:வீரவநல்லூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:வீரவநல்லூர்
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுந்தரராஜ பெருமாள்
தாயார்:சுந்தரவல்லி
வரலாறு
தொன்மை:பழைமையானது

வீரவநல்லூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள தொன்மையான வைணவத் திருக்கோயில். காசிப முனிவர் தவமிருந்து பெருமாளைத் தரிசித்து தங்கச்செய்த திருத்தலம்.

கும்பாபிஷேகம்

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள இத்திருக்கோயிலை அறநிலையத்துறை சீரமைக்காததால், பக்தர்களாலும் அர்ச்சகர்களாலும் என்.வெங்கடாச்சாரி எனும் பக்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பக்தர்கள் மூலம் சுமார் 49 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் செய்யப்பட்டு 15.03.2013 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. [1]

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவில் சேரன்மாதேவிக்கும் அம்பாசமுத்திரத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது வீரவநல்லூர்.[2]

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்;8.03.2013; பக்கம் 2-6;
  2. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=30295