வீரவணக்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வீரவணக்கம்
இயக்கம்அனில் வி நாகேந்திரன்
தயாரிப்புஅனில் வி நாகேந்திரன்
கதைஅனில் வி நாகேந்திரன்
இசை


நடிப்பு
ஒளிப்பதிவுகவியரசு
கலையகம்விசாரத் கிரியேஷன்ஸ்
வெளியீடு29 ஆகத்து 2025 (2025-08-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீரவணக்கம் (veera vanakkam) என்பது 2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அரசியல் நாடகத் திரைப்படமாகும். இதை தயாரிப்பாளரும், எழுத்தாளரும், பாடலாசிரியருமான அனில் வி நாகேந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரித்தேஷ், சித்திக், பி. கே. மேதினி, ஆதர்ஷ், சுரபி லெட்சுமி, பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, பரணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

கேரளத்தில் பொதுவுடமை இயக்கத்தை நிறுவிய பி. கிருஷ்ணப் பிள்ளையின் வழ்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த வசந்தத்தின்றெ கனல்வழிகளில் என்ற படத்தின் இரண்டாம் பாகமே இப்படம் என்கிறது படக்குழு.[1]

இப்படம் பி. கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்கை வரலாற்றை திரைப்படத்திற்காக கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது.[2]

கதைக்களம்

மதுரையில் வாழ்ந்து மறைந்த வேலாயுதம் என்ற பொதுவுடமைப் போராளியின் பேரன் பி. கே. மேதினியைச் சந்திக்க கேரளம் வருகிறார். அவருக்கும் அவருடன் வரும் தோழர்களுக்கும் கேரளப் பொதுவுடமைத் தலைவரான பி. கிருஷ்ணப் பிள்ளையின் வழ்க்கைக் கதையை மேதினி சொல்கிறார். அவரின் பார்வையில் கதை விரிகிறது. பி. கிருஷ்ணப் பிள்ளையின் ஆளுமையால் ஈர்க்கபட்ட இ. எம். எஸ். நம்பூதிரிபாடு, ஏ. கே. கோபாலன் ஆகியோர் இரண்டாம்கட்ட பொதுவுடமைத் தலைவர்கள் எப்படி உருவானார்கள் என்பதைப் பற்றியும் கதை பேசுகிறது.

திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரியின் இடலாக்குடி சிறையில் அடைக்கப்படும் கிருஷ்ணப் பிள்ளை தமிழ்நாட்டின் மருமகனாக காரணமான ஒரு காதல் கதையும் இதில் இடம்பெற்றுள்ளது.

நடிகர்கள்

இசை

எம். கே. அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. இரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி. ஜே. குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்தனர். பாடல் வரிகளை நவீன் பாரதி எழுதியுள்ளார். டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி. எம். எஸ். செல்வகுமார் இப்படத்தின் வழியாகத் திரைப்படப் பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார். மேலும் பி. கே. மேதினி, சி. ஜெ. குட்டப்பன், யாசின் நிசார், ரவி சங்கர், சோனியா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வீரவணக்கம்&oldid=501250" இலிருந்து மீள்விக்கப்பட்டது