சுரபி லெட்சுமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரபி லெட்சுமி
சுரபி லெட்சுமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
சுரபி லெட்சுமி
பிறப்புபெயர் சுரபி.சி.எம்
பிறந்ததிகதி 16 நவம்பர் 1986 (1986-11-16) (அகவை 37)
பிறந்தஇடம் நரிக்குனில், கோழிக்கோடு, கேரளா,இந்தியா
பணி நடிகை
கல்வி திரையரங்கக்கலை முதுகலை பட்டம்
கல்வி நிலையம் மகாத்மாகாந்தி பல்கலைகழகம், கேரளா
செயற்பட்ட ஆண்டுகள் 2005–தற்போது வரை
செயற்பட்ட ஆண்டுகள் 2005–தற்போது வரை
குறிப்பிடத்தக்க விருதுகள் தேசிய திரைப்பட விருது (2016)
துணைவர் விபின் சுதாகர் (திருமணம் 2014; விவாகரத்து 2017)[1]
இணையதளம் www.surabhilakshmi.com

சுரபி சி.எம் (Surabhi Lakshmi) என்று அழைக்கப்படும் சுரபி லட்சுமி என்பவர், ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடை ஆகியனவற்றிலும் நடித்து வருகிறார். இவர் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார்.

மின்னாமினுங்கு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடுத்தர வயதுடைய தாயின் பாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக 2016 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை

லெட்சுமி அக்டோபர் 5, 1987 ஆண்டு ஆண்டி-ராதா இணையருக்குப் பிறந்தார். இவர் கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள நரிக்குனி எனும் ஊரை சார்ந்தவர்.[3][4]

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் முதல் தரவரிசையுடன் பரதநாட்டியத்தில் பி.ஏ பட்டம் பெற்றார்.[2]

சிறீ சங்கராச்சார்யா சமசுகிருதப் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலையில் எம்.ஏ பட்டமும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துக் கலையில் எம்.பில் பட்டமும் பெற்றார்.[4]

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் ஸ்ரீ சங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துக் கலையில் பி.எச்.டி மாணவி ஆவார்.[5]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுரபி_லெட்சுமி&oldid=22808" இருந்து மீள்விக்கப்பட்டது