விஷ்ணுபிரியா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விஷ்ணுபிரியா
பிறப்பு22 பெப்ரவரி 1987 (1987-02-22) (அகவை 37)
பகுரைன்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2007-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
வினய் விஜயன் (தி. 2019)
[1]

விஷ்ணுபிரியா இராமச்சந்திரன் பிள்ளை (Vishnupriya Ramchandran Pillai) (பிறப்பு 22 பிப்ரவரி 1987 பகுரைன்) இவர் ஓர் இந்திய நடிகையும்,[2] நடனக் கலைஞரும், வடிவழகியுமாவார். ஏசியாநெட் என்ற மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "வோடபோன் தகாடிமி" என்ற நடன உண்மைநிலை நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரை வாழ்க்கை

2007 ஆம் ஆண்டில் ஸ்பீட் ட்ராக் என்ற படத்தின் மூலம் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர், "கேரளோத்சவம் 2009" என்ற படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் இவர், "பெண்பட்டணம்" (2010) என்றத் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக கவனிக்கப்பட்டார். அதன் பின்னர், இவர் பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். நாங்க (2011) படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். [3] இவர் 2013 இல் மலையாளத் திரைப்பட கலைஞர்களின் சங்கத்தின் (AMMA) நிகழ்ச்சிக்காக நடன நிகழ்சியை நிகழ்த்தியிருந்தார். பிளவர்ஸ் தொலைக்காட்சியின் ஸ்டார் சேலஞ்ச் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டில், இராம் அருண் காஸ்ட்ரோவுடன் வி 1 என்ற தமிழ் படத்தில் நடித்தார். படத்தின் விமர்சனத்தில், ஒரு விமர்சகர் "அருண் காஸ்ட்ரோவும் விஷ்ணு பிரியாவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் பிரகாசிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார், மற்றொருவர் "இராம் அருணும் விஷ்ணுபிரியாவும் அந்தந்த வேடங்களில் கச்சிதமாக பொருந்தியுள்ளனர்" என்று குறிப்பிட்டார். [4] [5]

ஆரம்ப கால வாழ்க்கை

விஷ்ணுபிரியா பகுரைனில் பிறந்து வளர்ந்தார்.[6] பகுரைனிலுள்ள இந்தியப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர், பிர்லா சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்றார். மேலும், தனது பள்ளி நாட்களில் பள்ளிகளுக்கிடையேயான பரத நாட்டியப் போட்டிகளையும் வென்றுள்ளார் .

மேற்கோள்கள்

  1. "Actress Vishnupriya Pillai ties the knot with Vinay Vijayan". The Times of India. 21 June 2019.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  3. http://www.kollyinsider.com/2012/03/vishnupriyas-double-dhamaka.html?m=0
  4. Subramanian, Anupama (28 December 2019). "V1 review: Enjoyable in parts". Deccan Chronicle.
  5. Menon, Thinkal (27 December 2019). "V1 Murder Case Movie Review : Starts off promisingly, but fails to hold the attention". The Times of India.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
"https://tamilar.wiki/index.php?title=விஷ்ணுபிரியா_(நடிகை)&oldid=23448" இருந்து மீள்விக்கப்பட்டது