விகாஸ்பீடியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விகாஸ்பீடியா
Vikaspedia logo.jpg
The logo for Vikaspedia
வலைத்தள வகைதகவல் களஞ்சியம்
உரிமையாளர்இந்திய அரசு
வெளியீடு18 பெப்ரவரி 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-02-18)[1]
உரலிvikaspedia.gov.in

விகாஸ்பீடியா (Vikaspedia) என்பது இந்திய அரசு நடத்தும் ஒரு தகவல் களஞ்சிய வலைப்பக்கமாகும்.[2][3] இது தொலைத்தொடர்பு - தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ளது. ஐதராபாத்தில் இயங்கும் கணினி வளர்ச்சி மையம் விகாஸ்பீடியாவை இயக்குகிறது. இது தற்பொழுது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், அசாமி,வங்காளம், குஜராத்தி, என மொத்தம் 10 இந்திய மொழிகளில் உள்ளது.[4] இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் தகவல்களைத் தருவதை இலக்காக வைத்துள்ளனர்.இது 2014 பிப்ரவரி 18 - ல் இந்தி, தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம், அசாமி, ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டது. 2014 ஜுலையில் தமிழ்மொழியில் தொடங்கப்பட்டது. தமிழில் ஏறத்தாழ ஏழாயிரம் கட்டுரைகள் இதில் உள்ளன.[5]

உள்ளடக்கம்

விகாஸ்பீடியா தளத்தில் வேளாண்மை, உடல்நலம், கல்வி, சமூகநலம், எரிசக்தி, மின்னாட்சி என்ற பகுப்புகளில் செய்திகள் உள்ளன.[6] இந்த பகுப்புகள் ஒவ்வொன்றும் பல துணைப்பகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்

  1. "Indian government launches Vikaspedia". Techinasia. 19 February 2014. http://www.techinasia.com/indian-government-launches-homemade-wikipedia/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+PennOlson+(Tech+in+Asia). பார்த்த நாள்: 20 February 2014. 
  2. "Government launches Vikaspedia as online information guide". DNA. 18 February 2014. http://www.dnaindia.com/india/report-government-launches-vikaspedia-as-online-information-guide-1963221. பார்த்த நாள்: 19 February 2014. 
  3. "Government launches Vikaspedia, website for local content development tools". NDTV. 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  4. "Govt launches Vikaspedia as online information guide". Livemint. 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  5. [1]
  6. "Government launches online information guide Vikaspedia". Times of India. 18 February 2014. http://timesofindia.indiatimes.com/tech/tech-news/internet/Government-launches-online-information-guide-Vikaspedia/articleshow/30629322.cms. பார்த்த நாள்: 19 February 2014. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விகாஸ்பீடியா&oldid=14558" இருந்து மீள்விக்கப்பட்டது