வா. மு. சேதுராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வா. மு. சேதுராமன்
வா. மு. சேதுராமன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வா. மு. சேதுராமன்
பிறந்ததிகதி 1935
அறியப்படுவது எழுத்தாளர்


வா. மு. சேதுராமன் (V. M. Sethuraman) என்பவர் ஓர் தமிழறிஞர், கவிஞர், தமிழ் உரிமை செயற்பாட்டாளர் ஆவா். இவர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் 1935ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையில் வளர்ந்தாலும், சுயமுயற்சியால் தமிழ் வித்துவான், முதுகலை எம்.ஏ., பி.எட். படித்துத்தேறி 1988-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் பெற்றவர். சேதுராமன் திருவல்லிக்கேணி முசுலீம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப்பணி என்னும் சிற்றிதழை நடத்திவருகிறார்.

படைப்புகள்

  • நெஞ்சத் தோட்டம்
  • தாயுமானவர் அந்தாதி
  • ஐயப்பன் பாமாலை
  • தமிழ் முழக்கம்
  • வாழ்க நீ எம்மாள் (காந்தி பற்றிய பன்மொழிக் கவிதை)
  • எண்ணச்சுடர் (கவியரங்கக் கவிதைகள்)
  • தாய்மண் (காவியம்)
  • 20 கட்டளைகள் (இந்திராகாந்தி )
  • ஐயப்பன் அற்றுப்படை
  • உலகை உயர்த்திய ஒருவன்
  • பற்றிலான் பற்று
  • மலைநாட்டின் மீதினிலே (பயணக் காவியம்)
  • காலக்கனி (கவிதை நாடகம்)
  • சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்)[1]
  • இயேசு அந்தாதி[2]

விருதுகள்

இவருக்கு பல்வேறு அமைப்புகளாலும், தனி நபர்களாலும் பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி, ஐயப்பன் அருள்கவி, கவிஞர் குலத் திலகம், செந்தமிழ்க் கொண்டல் போன்ற பட்டங்கள் வழங்கபட்டுள்ளன. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி விருதினை 1989-1990ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது. 2001ஆம் ஆன்டு தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் திருவள்ளுவர் விருது இவருக்கு வழங்கபட்டது.[3] தினத்தந்தி பத்திரிக்கை சார்பாக இவருக்கு ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் ‘‘விருது’’ 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த விருது வெள்ளிப் பட்டயத்துடன் ரூ 3 இலட்சம் ரொக்கப்பரிசு கொண்டது.[4][5]

பார்வை நூல்

  • தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்

மேற்கோள்

  1. "Welcome To TamilAuthors.com". www.tamilauthors.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  2. "இயேசு அந்தாதி – Dial for Books" (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  3. http://tamilvalarchithurai.com/award-winners/
  4. "'பெருங்கவிக்கோ' வா.மு.சேதுராமன், தங்கர்பச்சானுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப்பரிசு;..." Tamilmithran (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  5. "வா.மு.சேதுராமன், தங்கர் பச்சானுக்கு 'சி.பா.ஆதித்தனார்' விருதுகள் : நீதியரசர் ராமசுப்பிரமணியன் பங்கேற்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
"https://tamilar.wiki/index.php?title=வா._மு._சேதுராமன்&oldid=5801" இருந்து மீள்விக்கப்பட்டது