வாமன சரிதை
Jump to navigation
Jump to search
வாமன சரிதை என்னும் நூல் உரைநூலால் தெரியவரும் நூல்களில் ஒன்று. [1] நவநீதப் பாட்டியல் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரையில் [2] வாமன சரிதை என்னும் நூல் பெயரளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"செய்வித்தோனால் பெயர் பெற்றன பிங்கல சரிதை, வாமன சரிதை" - என்பது அந்த உரையில் வரும் குறிப்பு. இதன்படி பிங்கலன் என்பவன் தன் வரலாற்றை நூலாகச் செய்ய உதவினான். அதன்படி செய்யப்பட்டது பிங்கல சரிதை. வாமனன் என்பவன் தன் வரலாற்றைச் செய்ய உதவினான். அதன்படி செய்யப்பட்ட நூல் வாமன சரிதை. - எனத் தெரியவரும்.
"செய்வித்தோனால் பெயர் பெற்றன 'சாதவாகனம்', 'இளந்திரையம்'." - என்று இறையனார் களவியல் உரை கூறுகிறது. இவற்றில் சரிதை என்னும் சொல் இல்லை.
வாமனன் சரிதை என்பது வாமன் [3] என்பதாகலாம்.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 402.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ ச. வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1943
- ↑ அருகன் பெயர்களில் ஒன்று ஆகலாம் என்று மு. அருணாசலம் கருதுகிறார்