வள்ளுவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அரசனின் ஆணையை முரசு அறைந்து அறிவிப்பவன் வள்ளுவன் என்னும் செய்தியைக் கம்பர் குறிப்பிடுகிறார். [1]

காலத்தைக் கணிக்கும் வல்லுனரை தமிழகத்தில் உள்ள காமங்களில்(கிராமங்களில்) வள்ளுவர் என்றழைப்பர். இவர்கள், கணியர்களைப் போலவே சோதிடம் மற்றும் வானியல் முதலிய கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களாவர். இவர்கள், காலத்தைக் கணிப்பது, நிமித்தம் பார்ப்பது, மழைவருவதைக் கணிப்பது, திருமணத்திற்கு நாள் மற்றும் பொருத்தம் பார்ப்பது, ஒரு குடும்பத்தில் அல்லது ஊரில் நடைபெறும் நல்ல காரியங்கள் கெட்ட காரியங்களுக்கு நேரம் காலம் கணித்துத் தருவது, கணி கேட்டு வருபவர்களுக்கு கணி சொல்வது முதலியவற்றைச் செய்பவர்கள்.

பழக்கவழக்கங்கள்

கலைகள்(அறிவியல்) என்பது மானிட இனத்தின் நன்மைக்குப் பயன்படும் நோக்கத்துடன் கண்டுபிடித்து வளர்க்கப்படுபவை என்பதை உணர்ந்தறிந்த சித்தர்கள், அதன் மூலம் தாங்கள் செய்யும் நன்மையின் மூலம் பயன்பெறும் மக்களிடம் கட்டணம் வாங்கவில்லை. பயன்பெற்றவரே முன்வந்து அவரால் முடிந்தளவு பொருள்(பணம்) அல்லது தானியம் கொடுப்பர். இதற்கு, காணிக்கை என்று பெயர். இவ்வாறு முற்காலங்களில், மக்களுக்கு இலவசமாகத் தீர்வுகளைத் தந்த சித்தர்களைப் போல, வள்ளுவர், வைத்தியர், பூசாரி(குறிசொல்லுபவர்), நாடி சோதிடர் முதலியவர் தாங்கள் கற்றறிந்த கலைகள் மூலம் மக்களுக்குச் செய்யும் நன்மைகளுக்கு கட்டணம் வாங்கும் பழக்கம் முன்னாட்களில் இல்லை. காணிக்கை கொடுக்கும் வழக்கம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்காலத்தில் சிலர் இக்கலைகள் மூலம் செய்யும் நன்மைக்கு கட்டணம் வாங்கும் வழக்கம் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்

  1. "என்புழி, வள்ளுவர், யானை மீமிசை நன் பறை அறைந்தனர்;" (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம் பானல் 111)
"https://tamilar.wiki/index.php?title=வள்ளுவர்&oldid=16357" இருந்து மீள்விக்கப்பட்டது