வல்லக்கோட்டை முருகன் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில்
படிமம்:Vallakottai Murugan temple.jpg
ஆள்கூறுகள்:12°52′58.8″N 79°55′58.8″E / 12.883000°N 79.933000°E / 12.883000; 79.933000Coordinates: 12°52′58.8″N 79°55′58.8″E / 12.883000°N 79.933000°E / 12.883000; 79.933000
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவு:வல்லக்கோட்டை
ஏற்றம்:74 m (243 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
தாயார்:வள்ளி, தெய்வானை
தீர்த்தம்:வஜ்ரா தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:தைப்பூசம், கந்த சட்டி, ஆடிக் கிருத்திகை

வல்லக்கோட்டை முருகன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும். 1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இக்கோயிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது; இந்தியாவில் அமைந்துள்ள முருகன் திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும்.[1] முருகனின் இரு புறங்களில் வள்ளி, தெய்வானை உள்ளனர். கருவறையைத் தவிர கோயில் சுற்றுகையில் கணபதி, உற்சவ திருவுருவம், சண்முகர் மற்றும் அம்மனுக்கு சன்னதிகள் உள்ளன.

அருணகிரிநாதரின் ஏழு திருப்புகழ் பாடல்களில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 74 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°52'58.8"N, 79°55'58.8"E (அதாவது, 12.882990°N, 79.932990°E) ஆகும்.

வல்லன் கோட்டை பெயர்க்காரணம்

வல்லக்கோட்டை முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில்  12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும். 1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும்.

இக்கோயிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது; இந்தியாவில் அமைந்துள்ள முருகன் திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும்.

இலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். இந்த மன்னனை காண  நாரத முனிவர் வந்தார். ஆணவம் பிடித்த மன்னனோ நாரதரை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அருகிலிருந்த வனத்திற்கு சென்றார். அங்கு கோரன் என்ற அரக்கன் பலநாடுகளை வென்று வெற்றிக்களிப்பில் வந்து கொண்டிருந்தான். அவனை கண்ட நாரதர், பகீரதனின் ஆணவத்தை அடக்க இவன் தான் சரியான ஆள் என முடிவெடுத்தார். பின்  அவனிடம் தானே வலிய செறு, கோரனே! நீ பல நாடுகளை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த இலஞ்சி நாட்டை வென்றால்  தான் உனது திக் விஜயம் நிறைவுபெறும், என்று தனக்கே உரித்தான பாணியில் சிண்டு முடித்து விட்டார்.

அசுரன் இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன் மிரண்டு விட்டான். பகீரதனை போரில்  வென்றான் அசுரன். நாடு நகரம் என அனைத்தும் இழந்த மன்னன் காட்டிற்கு சென்றான். அங்கு நாரத முனிவர் இருந்தார்.  அவரிடம் சென்று கெஞ்சினால் நல்வழி காட்டுவார் என கூறி சென்று விட்டார்.

பகீரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் மிகுந்த சிரமப்பட்டான். பின் ஒரு வழியாக திர்வாச முனிவரை தேடிக் கண்டு  பிடுத்து அவரடம் தன் நிலையைக் கூறி நாட்டல் மீட்க வழி கேட்டு மன்றாடினான், துர்வாசர் அவனிடம், வெள்ளிக்கிழமைகளில்  விரதம் இருந்து இங்குள்ள பாதிரி மரத்தடியில் உள்ள முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும்  என்று கூறிச்சென்றார். இவனும் துர்வாசர் கூறியபடி முருகனை வழிப்பட்டான். சிறிது காலம் கழித்து முருகனுக்கு அவனே ஒரு  கோயிலும் கட்டி வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்தான். இவன் கட்டிய கோயில் தான் வல்லக்கோட்டை சுப்ரமணியர் கோயில்

சான்றுகோள்கள்

  1. "Vallakottai Murugan Temple". சென்னை நெட்வொர்க் வலைத்தளம். Archived from the original on 2013-02-11. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 24, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்