வறுமைக்கு எதிரான அமைப்பு

வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Against Hunger) என்பது மாந்த நலன்சார்ந்த சர்வதேச அமைப்பாகும். பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பானது வறுமை இல்லாத உலகம் எனும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பானது ஊட்டச் சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உதவி புரிவதும், தூய்மையான நீரை வழங்க வழி செய்யவும்,பசிக்கு நாட்டக்கூடிய தீர்வினை வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.

வறுமைக்கு எதிரான அமைப்பு

2014 இல் வறுமை ஒழிப்பிற்கு எதிராக நாற்பத்தி ஒன்பது நாடுகளில் உலகம் முழுவதிலும் உள்ள ஆறாயிரம் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு சுமார் 13.6 மில்லியன் உதவி தேவைப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனர்.[1]

வரலாறு

இவ்வமைப்பானது 1979 ஆம் ஆண்டு பிரான்ஸில் பிரஞ்சு மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மற்றும் எழுத்தாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட்டு காஸ்ட்லர் இந்த அமைப்பின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த அமைப்பு பாக்கித்தானில் இருந்த ஆப்கானித்தான் ஏதிலிகளுக்கு உதவிசெய்தது. பின் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட உகாண்டா மக்களுக்கும் , தாய்லாந்து நாட்டில் இருந்த கம்போடியா ஏதிலிகளுக்கும் உதவி செய்தனர். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மேலும் துணை அமைப்புக்களை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள், போன்ற நாடுகளில் ஏற்படுத்தினர். வறுமை ஒழிப்பு அறிவியல் குழுவானது தீவிர ஊட்டச்சத்துக் குறைவிற்கு நோய்தீர்க்கும் பால் சூத்திரமான எஃப்100 (F100) என்பதனைக் கண்டறிந்தது. இதனைப் பயன்படுத்தியதன் விளைவாக ஐந்து வயதிற்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் இறக்கும் இறப்பு விகிதமானது இருபத்தி ஐந்து சவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைந்தது.[2]

இந்த சர்வதேச அமைப்பிற்கு தற்போது ஐந்து நாடுகளில் தலைமையிடங்கள் உள்ளன. பிரான்சு, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஐக்கிய இராச்சியம். இந்த அமைப்பானது ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, மற்றும் பரிந்துரை செய்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் பணியினை மேற்கொள்கின்றன.[3]

வறுமைக்கு எதிரான உணவு விடுதி

உணவு நிறுவனங்கள் மற்றும் பான நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பிற்கு எதிரான உணவு விடுதி உணவை நேசிப்போம், உணவை வழங்குவோம் எனும் பெயரில் பரப்புரை இயக்கம் நடத்தப்படுகிறது.[4][5]

இலங்கையில் இதன் பணி

இலங்கையில் 1996 ஆம் ஆண்டு முதல், பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. போர்க் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றது. இலங்கையில் அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற சண்டையின் போது மீட்கும் பணியில் இருந்த வறுமைக்கு எதிரான அமைப்பைச்சார்ந்த பதினாறு உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டனர்.

நாடுகளின் பங்களிப்புகள்

2017 ஆம் ஆண்டு வரையில் 51 நாடுகளில் வறுமைக்கு எதிரான அமைப்பானது செயல்பட்டு வருகிறது.[6]

ஆசியா

வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மங்கோலியா,நேபாளம், பாக்கித்தான், பிலிப்பீன்சு

ஐரோப்பா

துருக்கி, உக்ரைன், தெற்கு காக்கேசியா

கரீபியன்

எயிட்டி

வறுமைக்கு எதிரான அமைப்பு நாடுகளின் செயல்பாடுகள்

1995 ஆம் ஆண்டிலிருந்து வறுமைக்கு எதிரான அமைப்பானது உலகம் முழுவதும் அதன் கட்டமைப்பினை ஏற்படுத்தியது.

இந்த சர்வதேச அமைப்பிற்கு தற்போது ஐந்து நாடுகளில் தலைமையிடங்கள் உள்ளன. பிரான்சு, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஐக்கிய இராச்சியம். மேலுமிதன் பயிற்சி மையங்கள் நைரோபியிலும் ஐந்து இடப்பெயர்வு மேலாண்மை தளங்கள் லியோன், பாரிஸ், பார்செலோனா, துபாய், பனாமா ஆகிய இடங்களில் உள்ளது.

செயல்படும் தலைமையிடங்கள்

பிரான்சு, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் உள்ள தலைமையிடங்கள் வறுமை எதிப்பு மையத்தின் செயல்படும் தலைமையிடங்கள் அதாவது களத்தில் நேரடியாகப் பங்குபெறுவது ஆகும்.

ஆராய்ச்சி, மேற்பார்வை, மடிப்பீட்டு தலைமையிடம்

ஐக்கிய இராச்சியம் வறுமை எதிப்பு மையத்தின் ஆராய்ச்சி, மேற்பார்வை, மடிப்பீட்டு தலைமையிடம் எனப்படுகிறது

நிதி திரட்டும் தலைமையிடம்

கனடா வறுமை எதிப்பு மையத்தின் நிதி திரட்டும் தலைமையிடமாக விளங்குகிறது. பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிதியினைப் பெறுகிறது.

வெளியிணைப்பு

மேற்கோள்கள்