வத்சலா மேனன்
வத்சலா மேனன் | |
---|---|
பிறப்பு | 1985 (அகவை 38–39) திருச்சூர் |
தேசியம் | இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்போது வரை |
பெற்றோர் | இராமன் மேனன் தேவகியம்மாள் |
வாழ்க்கைத் துணை | கலப்புரக்கர் அரிதாசன் நாயர் |
பிள்ளைகள் | 3[1] |
வத்சலா மேனன் (Valsala Menon) (பிறப்பு 1945) மலையாளத் திரைப்படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகையாவார். இவர், சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மலையாளத் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் தீவிரமாக உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
திருச்சூர் மாவட்டத்தில் இராமன் மேனன் - தேவகியம்மாள் ஆகியோருக்கு மூன்று மூத்த சகோதரர்களுடன் 1945 இல் பிறந்தார். [2] சிறுவயதிலேயே இவர் பாரம்பரிய நடனத்தைக் கற்றுக் கொண்டார். மேலும், அக்காலத் தலைவர்களிடையேயும், ஆட்சியாளர்களின் முன்னிலையிலும் பல்வேறு மேடைகளில் நடனமாடியுள்ளார். 1953 ஆம் ஆண்டில் "திரமாலா" என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தைக் கலைஞராக திரைத்தொழிலுக்கு வந்தார். 16 வயதில் திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறினார். இவர் மூன்று குழந்தைகளுக்குத் தாயான பிறகு 1970 இல் "மிஸ் திரிச்சூர்" ஆனார். இவர், மும்பையில் நடனப் பயிற்சியுடன், மலையாள வகுப்புகளையும் எடுத்து வந்தார். அங்கு இவர் மகளிர் சங்கத்திலும் தீவிரமாக இருந்தார். இவரது திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்த போதிலும், 1985 ஆம் ஆண்டில் வெளியான "கிராதம்" என்ற படத்தின் மூலம் திரையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 1994இல் வெளியான பரிணயம் என்ற படத்தில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அதன் பின்னர் இவர் சில துணைக் கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். [3] அத்துடன் குணச்சித்திர வேடங்களில் பல தொலைக்காட்சித் தொடர்களிலும், விளம்பரங்களிலும் தோன்றி வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் 1961 இல் மறைந்த கலப்புரக்கல் அரிதாசன் என்பவரை மணந்தார். அரிதாசன் மும்பையில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு பிரகாஷ், பிரேம் , பிரியன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். பிரகாஷ் மேனன் ஆஸ்திரேலியாவிலும், பிரேம் மேனன் சிங்கப்பூரிலும், பிரியன் மேனன் கொச்சியிலும் பணிபுரிகின்றனர். [4]
மேற்கோள்கள்
- ↑ http://www.mangalam.com/cinema/mini-screen/16456
- ↑ "കലയെ കൈവിടാതെ ജീവിതം പടുത്തുയര്ത്തി വത്സലാ മേനോന്". mathrubhuminews.in இம் மூலத்தில் இருந்து 21 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191221151401/http://mathrubhuminews.in/ee/Programs/Episode/6398/valsala-menon-provesonce-an-artist-always-an-artist-ee-vazhitharayil-episod/M.
- ↑ http://www.mangalam.com/mangalam-varika/155828
- ↑ "Mangalam Varika 19 Nov 2012". mangalamvarika.com இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131031095108/http://www.mangalamvarika.com/index.php/en/home/index/59/14.
ஆதாரங்கள்
- http://www.mallumovies.org/artist/valsala-menon பரணிடப்பட்டது 2013-03-03 at the வந்தவழி இயந்திரம்
- http://www.malayalachalachithram.com/movieslist.php?a=7343
- http://cinidiary.com/peopleinfo.php?sletter=V&pigsection=Actor&picata=2 பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம்