வதிலை பிரபா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வதிலை பிரபா |
---|---|
பிறப்புபெயர் | ப. பிரபாகரன் |
பிறந்ததிகதி | மார்ச் 4, 1966 |
பிறந்தஇடம் | போ. அணைக்கரைப்பட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
பணி | பதிப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலைப் பட்டம் (வரலாறு), முதுகலைப் பட்டம் (இதழியல்) |
அறியப்படுவது | எழுத்தாளர், பதிப்பாளர் |
பெற்றோர் | இரா. பரமசிவன் (தந்தை), இராஜம்மாள் (தாய்) |
துணைவர் | சண்முகதேவி |
பிள்ளைகள் | ஓவியா (மகள்), இமையா (மகள்) |
இணையதளம் | www.mahakavi.in |
வதிலை பிரபா (Vathilai Praba) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர்[1] மற்றும் பதிப்பாளர்[2] என்ற பன்முகங்களுடன் இயங்கிவரும் தமிழ் ஆர்வலராவார். இவர் 1966 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நான்காம் தேதியன்று பிறந்தார். போடிநாயக்கனூர் அருகிலுள்ள போ.அணைக்கரைப்பட்டி இவருடைய சொந்த ஊராகும். திண்டுக்கல் மாவட்டத்தில் தான் வசித்து வரும் ஊரான வத்தலக்குண்டு எனும் ஊரின் சுருக்கப் பெயரான வதிலையை தன் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்ட இவர் பிரபாகரன் என்ற தனது இயற்பெயரை வதிலை பிரபா என்ற புனைப்பெயராக மாற்றிக் கொண்டார்.
மகாகவி என்ற பெயரில் ஒரு சிற்றிதழை வதிலை பிரபா நடத்தி வருகிறார். 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை கோவை தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இரா. பரமசிவன் இராஜம்மாள் தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். “வரலாறு” பாடத்தில் முதுகலைப் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சண்முகதேவியை திருமணம் செய்து கொண்டார். ஓவியா, இமையா என்ற இரண்டு பெண் குழந்தைகளுடன் இனிய குடும்பமாக வாழ்கிறார்.
இலக்கியப் பணிகள்
முந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகள், இருநூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகள், இருபத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் என இவரது இலக்கியப் பணி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. “யார் குற்றவாளி?” என்ற பெயரில் குறும்படம் ஒன்றையும் பிரபா இயக்கியுள்ளார்.
எழுத்தின் மீது ஆர்வம். கொண்டு வத்தலகுண்டு நகரிலேயே பதிப்பகம் ஒன்றும் நடத்துகிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் புத்தகங்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு இப்பதிப்பகத்தை நடத்துகிறார். ஓவியா பதிப்பகம் மூலம் இதுவரை நூறு நூல்களுக்கு மேலாக வெளியிட்டுள்ளார்.
எழுதிய நூல்கள்
ஐக்கூ நூல்கள்
- தீ
- குடையின் கீழ் வானம்
- மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை[3] (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
- ஐக்கூ உலகம் (தொகுப்பு நூல்)
கவிதை
- மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்
- மிடறு மிடறாய் மௌனம்[4]
சிறுகதை
- குரும்பை
சிறப்புகள்
- வதிலை பிரபாவின் பரிந்துரையின் பேரில் மைசூரு செம்மொழி உயராய்வு மையம் 30 புத்தகங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது.[5]
- மாவட்டங்களில் சிறந்த தமிழ்ப் பணி ஆற்றுவோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது 2018 ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு அன்று வதிலை பிரபாவுக்கு வழங்கப்பட்டது.[6]
- 2019 ஆம் ஆண்டு கவிஞர் வதிலை பிரபாவிற்கு தலைமைச் செயலகத் தமிழ்மன்றம் கவிஞரேறு விருதை வழங்கி சிறப்பித்தது.[7]
மேற்கோள்கள்
- ↑ M, விகடன் டீம்,HASSIFKHAN K. P. "சொல்வனம்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Welcome To TamilAuthors.com". www.tamilauthors.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- ↑ "மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !". eegarai.darkbb.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- ↑ "வதிலை நகரில் வாழும் எழுத்தாளர்". Dinamalar. 2019-03-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- ↑ https://www.dinamani.com/tamilnadu/2019/feb/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3098371.html
- ↑ "தலைமைச் செயலக தமிழ் மன்ற விழாவில் சான்றோர்களுக்கு விருது!". nakkheeran (in English). 2019-05-27. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.