லேடீஸ் டைலர்
லேடீஸ் டைலர் | |
---|---|
இயக்கம் | வம்சி |
தயாரிப்பு | கே. சாரதா தேவி ஸ்ரவந்தி ரவி கிஷோர் (presents) |
கதை | தனிகில்லா பரணி (வசனம்) |
திரைக்கதை | வம்சி தனிகெல்ல பரணி வேமுரி சத்தியநாராயணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராஜேந்திர பிரசாத் அர்ச்சனா |
ஒளிப்பதிவு | ஹரி அனுமோலு |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
கலையகம் | சிறீ சரவந்தி மூவிஸ் |
வெளியீடு | நவம்பர் 26, 1986 |
ஓட்டம் | 154 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
லேடீஸ் டைலர் என்பது 1986 இல் வெளிவந்த தெலுங்கு மொழியை வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார்.
இப்படம் லேடீஸ் டைலர் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படம் மராத்தியில் லக்ஷ்மிகாந்த் பெர்டே மற்றும் வர்ஷா உஸ்கோன்கர் நடித்து 'குதே குதே ஷோது மீ திலா' (1989) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது, 2006 இல் இந்தியில் அதே பெயரில் ராஜ்பால் யாதவ் மற்றும் கிம் ஷர்மா நடித்தனர்.
நடிகர்கள்
- ராஜேந்திர பிரசாத் - சுந்தரம்
- அர்ச்சனா - சுஜாதா
- ரால்லபள்ளி - கொயடோரா (சூத்திரம் சொல்பவர்)
- தனிகில்லா பரணி - காவல் அதிகாரி
- மல்லிகார்ஜுன ராவ் பட்டாள சத்யமாக
- சுபலேகா சுதாகர் சீதாராமுடாக
- பிரதீப் சக்தி வெங்கடரத்தினம்
- ஸ்ரீனிவாஸ் வேடத்தில் கருண்
- தாம் புகைப்படக் கலைஞராக ஜம்புலிங்கம்
- தீபா தையாவாக
- நீலவேணியாக சந்தியா
- ஒய். விஜயா -
- பிருத்விராஜ்
கதை
வார்ப்புரு:கதைச் சுருக்கம் தையல் கலைஞரான சுந்தரம் மிக திறமையான தையல் கலைஞராக இருக்கின்றார். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத ஒரு வாழ்வதை வெறுக்கின்றார். அந்நேரத்தில் ஒரு குறி சொல்லியாக வரக்கூடியவர் வலது காலில் மச்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் கிடைக்கும் என்றும் அதன் மூலமாக பெரிய பணக்காரராகவும் செல்வந்தராகவும் சுந்தரம் வலம் வர முடியும் என்றும் கூறுகின்றார். அவருடைய குறியில் நம்பிக்கை கொண்ட சுந்தரம் மச்சம் உள்ள பெண்ணை தேடுகின்றார். நாகமணி, நீலவேணி மற்றும் தயா ஆகிய மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து காதல் செய்கின்றார். ஒரு நாள் அவர்கள் யாரிடமும் மச்சம் இல்லை என்பதை தெரிந்து கொள்கின்றார். பின்பு அவர்களிடமிருந்து விலகி விடுகின்றார்.
அந்த ஊருக்கு புதிதாக வரக்கூடிய சுஜாதா என்ற ஆசிரியையின் வீட்டில் குளிக்கும் ஒரு பெண்ணிற்கு மச்சம் உள்ளதை காண்கிறார். அப்பெண் சுஜாதா என்றென்னி காதல் வளர்க்கிறார். இம்முறை உண்மையாக காதலை உணருகிறார். இதற்கிடையே ஊரின் தலைவரான வெங்கடரத்னத்தின் தங்கை சுந்தரி கருவுற்று இருப்பது தெரியவருகிறது. அவள் அடிக்கடி தையல்கலைஞர் வீட்டிற்கு செல்வதை வேலையாள் மூலம் அறிந்த வெங்கடரத்னம் கோபம் கொண்டு சுந்தரத்தை தாக்குகிறார். ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது. அப்போது நாகமணி, நீலவேணி மற்றும் தயா ஆகியோரிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக அவர் கொடுத்த வாக்குறுதியை அனைவரும் அறிகின்றனர்.
இந்நிலையில் சுஜாதா சுந்தரி கருவுற உண்மையான காரணம் சீதாராமுடு என்பதை சபையில் கூறுகிறார். சீதாராமுடு ஒப்புக்கொள்கிறார். அவரை கொல்ல வருகின்ற வெங்கரத்தினத்தை தடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறுகிறார். நாயகன் சுந்தரம் மனவருத்ததுடன் ஊரைவிட்டு கிளம்பும் போது சுஜாதாவும் இணைந்து கொள்கிறார். இரு தம்பதிகளுக்கும் திருமணம் நடக்கிறது. முதலிரவில் வெகுளி பெண்ணான சுந்தரி சீதாராமுடுவின் முதுகில் ஏறி வலம் வருகையில் அவர் தொடையில் மச்சம் இருப்பதை சுந்தரம் கண்டு மனம் நொந்து கொள்வதாக கதை நகைச்சுவையாக முடிவடைகிறது.
இசை
இத் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சிறிவெண்ணெல சீதாராம சாஸ்திரி பாடல்களை எழுதியுள்ளார். .[1][2]
Track listing[1][2] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "பொரபதிதி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, இராஜேந்திர பிரசாத் | 4:02 | |||||||
2. | "கோபிலோலா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 4:22 | |||||||
3. | "ஹயம்மா ஹயம்மா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:24 | |||||||
4. | "எக்டா எக்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 4:00 | |||||||
5. | "வேதாடண்டே ஒல்லோகோச்சி" | மனோ & குழுவினர் | 3:58 | |||||||
மொத்த நீளம்: |
22:46 |
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 "Ladies Tailor". https://open.spotify.com/album/48IvNoMLzGScFAFVIdU8r3.
- ↑ 2.0 2.1 "Ladies Tailor" இம் மூலத்தில் இருந்து 11 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220111091117/https://indiancine.ma/AAZT/info.