லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் (Lester James Peries, சிங்களம்: ලෙස්ටර් ජේම්ස් පීරිස්, 5 ஏப்ரல் 1919 – 29 ஏப்ரல் 2018) இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார்.[1][2][3] 1949 முதல் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், 20 முழுநீளத் திரைப்படங்களையும், 11 ஆவணப் படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார்.[4] ரேக்காவ, கம்பரெலிய, நிதானய போன்ற திரைப்படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. இவரது திரைப்படங்கள் பொதுவாக இலங்கையின் கிராமப் பகுதிகளில் வாழும் குடும்ப வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டிருக்கும்.[3][5]

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்
Lester James Peries
Lester 1.jpg
பிறப்பு(1919-04-05)5 ஏப்ரல் 1919
தெகிவளை-கல்கிசை, பிரித்தானிய இலங்கை
இறப்பு28 ஏப்ரல் 2018(2018-04-28) (அகவை 99)
கொழும்பு, இலங்கை
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், உரையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1949–2006
வாழ்க்கைத்
துணை
சுமித்ரா பீரிஸ் (1964–2018)
வலைத்தளம்
www.ljpspfoundation.org

1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது மூழுநீளத் திரைப்படம் ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

இவர் இயக்கிய படங்கள்

  • ரேகாவ (விதியின் கோடுகள்) 1956
  • சந்தேசய (செய்தி) 1960
  • கம்பெரலிய (கிராமப் பிறழ்வு) 1964
  • கொளுகதவத்த (ஊமை இதயம்) 1968
  • தாசநிசா (கண்களின் காரணத்தால்) 1972
  • The God King 1975
  • யுகாந்தய (யுகத்தின் முடிவில்) 1983
  • வேகந்தவளுவ 2001

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லெஸ்டர்_ஜேம்ஸ்_பீரிஸ்&oldid=28520" இருந்து மீள்விக்கப்பட்டது