லியோ பிரபு
லியோ பிரபு | |
---|---|
பிறப்பு | லியோ 1933 தமிழ்நாடு, கோயமுத்தூர் கோயமுத்தூர் |
பணி | பல்துறை நாடக கலைஞர், திடைப்பட நடிகர் & எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1950–தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | உசா பிரபு |
பிள்ளைகள் | முருகசங்கரி லியோ |
வலைத்தளம் | |
kalaikoodam |
லியோ பிரபு (Leo Prabhu) (பிறப்பு-1933, இறப்பு-30.12.2023) என்பவர் ஒரு மூத்த நாடக ஆசிரியர், நாடக எழுத்தாளர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புதின ஆசிரியர் ஆவார். புகழ்பெற்ற பாய்ஸ் நடக நிறுவனத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், எஸ். வி. சகஸ்ரநாமம் போன்ற தமிழ் நாடகவியல் மேதைகளுடன் சேவா ஸ்டேஜ், ஒய். ஜி. பார்த்தசாரதி பிரபு போன்றவர்களுடன் பல ஆண்டுகள் நாடகத் துறையில் பயணித்தார். பின்னர் தனது சொந்த நாடகக் குழுவான ஸ்டேஜ் இமேஜை நிறுவி புகழ் பெற்றார். தமிழ் நடகத் துறைக்கு இவரின் பங்களிப்பானது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் மிகச்சிறந்த நடிகர்கள், எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் 1990 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு தமிழக அரசின் மிக உயர்ந்த மாநில விருதான கலைமமணி விருதை வழங்கியது.
ஆரம்ப கால வாழ்க்கை
கோவையில் பிறந்த லியோ பிரபு, சிறுவயது முதலே கால்பந்து மற்றும் நடிப்பு மீது ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் இவர் பல்துறை நாடக கலைஞராகவும், ஊடகவியலாளர் மற்றும் புனைவு எழுத்தாளராகவும் ஆனார். இவரது பன்முகத்தன்மையை நடிகர் (நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படம்), இயக்குனர் (தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகங்கள்) மற்றும் எழுத்தாளர் (திரைக்கதை, உரையாடல் மற்றும் புதினங்கள்) என பரவலாக வகைப்படுத்தலாம்.
பகுதி திரைப்படவியல்
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | பங்கு | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
1974 | பருவகாலம் | தமிழ் | ||
1983 | இது எங்க நாடு | தமிழ் | ||
1983 | அண்ணே அண்ணே | தமிழ் | ||
1984 | நான் மகான் அல்ல (1984 திரைப்படம்) | தமிழ் | ||
1986 | புதிர் | தமிழ் | ||
1987 | பேர் சொல்லும் பிள்ளை | தமிழ் | ||
1988 | ரெண்டும் ரெண்டும் அஞ்சு | தமிழ் | ||
இறப்பு
இவர் 30.12.2023 அன்று மாலை 06.00 மணிக்கு உடல்நலக் குறைவின் காரணமாக இறந்தார்.[1]
இணைப்புகள்
- http://www.thehindu.com/features/friday-review/theatre/evocative-of-a-glorious-era/article5922081.ece . 17 ஏப்ரல் 2014 தேதியிட்ட தி ஹிந்து வெள்ளிக்கிழமை விமர்சனத்தில் லியோ பிரபுவின் சமீபத்திய நாடகத்தின் விமர்சனம்.
- http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/old-world-flavour/article5923280.ece .
- https://antrukandamugam.wordpress.com/2015/07/21/leo-prabhu/ . நடிகரின் சுயசரிதை
- http://www.kalaikoodam.org/ அதிகாரப்பூர்வ வலைத்தளம்
மேற்கோள்கள்
- ↑ manimegalai.a, "Leo Prabhu Death: தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மற்றொரு மரணம்! பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்.!", Asianet News Network Pvt Ltd, பார்க்கப்பட்ட நாள் 2023-12-30