லாரி (திரைப்படம்)
லோரி | |
---|---|
இயக்கம் | பரதன் |
தயாரிப்பு | ராசம்மா அரி |
கதை | பத்மராசன் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | அச்சன்குச்சு பாலன் கே. நாயர் நித்யா பிரதாப் போத்தன் மீனா சாந்தகுமாரி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
கலையகம் | சுப்ரியா படத்தொகுப்பு |
வெளியீடு | 23-ஆகச்டு-1980 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
லோரி (Lorry) பரதன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். எழுத்தாளர் பத்மராசன் எழுதிய இப்படத்தில் அச்சன்குச்சு, பாலன் கே. நாயர், நித்யா, மீனா மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை
வார்ப்புரு:கதைச் சுருக்கம் வேலன் என்பவர் தெருக்கூத்து கலைஞராக இருக்கின்றார். அவர் சிறுவர்களையும் சிறுமிகளையும் கடத்தி தெருக்கூத்து வித்தைகளை கற்றுத் தந்து தன்னுடன் சாகசம் செய்ய வைக்கின்றார். சில சிறுவர்களை அவர் கண்களை குருடாக்கி வைத்துள்ளார். கண்கள் இல்லாத மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடியவர்களை இசைக்க கற்றுத் தருகின்றார். அவர்களுடைய குழுவில் இருக்கும் ஒரே பெண்ணான ராணி என்பவரை கயிற்றின் மேல் உயரத்தில் நடக்கக்கூடிய சாகசம் செய்பவராக மாற்றியுள்ளார்.
சிகப்பு நிற சரக்குந்து ஓட்டுனரான ஜோசப் மற்றும் தெருக்கூத்து கலைஞர் ஆன வேலன் ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர் இருவரும் ஒன்றாக இணைந்து மாலை நேரத்தில் சாராயம் அருந்துகின்றனர். ஜோசப்பின் உதவியாளராக இருக்கக்கூடிய தாசப்பனும் தெருக்கூத்து கலைஞரான ராணியும் காதலிக்கின்றனர். ராணி உடன் பேசும் பொழுது வேலன் ராணியினுடைய தந்தை இல்லை என்றும், அவளை கடத்தி வந்து வேலை வாங்கக்கூடிய ஒரு கொடூரமான எஜமான் என்றும் தாசப்பன் அறிந்து கொள்கிறார். தாசப்பனும் ராணியும் ஆற்றில் மீன்களைப் பிடித்துக் கொண்டு வருவதை வேலனும் ஜோசப்பும் காண்கின்றனர். பருவப் பெண்ணாக இருக்கக்கூடிய ராணியின் மேல் வேலனுக்கும் ஜோசப்பிற்கும் காம எண்ணம் வருகின்றது.
ராணியை சாகசம் செய்ய பயிற்சி அளிக்கும் போது வேலன் தவறான எண்ணங்களோடு பார்ப்பதை ராணி புரிந்து கொள்கிறாள். சில முறை எஜமான் வேலனிடமிருந்து விலகி செல்கிறார். இதனால் வேலனுக்கு தாசப்பன் மீது கோபம் வருகிறது. ஒருமுறை ராணியும் தாசப்பனும் இரவில் சந்தித்துக் கொள்வதை வேலன் கண்டுவிடுகிறார். எஜமான் கோபத்தோடு வருவதைக் கண்ட ராணி தாசப்பணி அங்கிருந்து சென்று விடச் சொல்கிறாள். கோபத்தோடு வந்த வேலன் ராணியை பலவந்தப்படுத்துகிறார். வேலனிடம் இருந்து தப்பிக்கும் ராணி லாரி ஓட்டுனரான ஜோசப்பிடம் மாட்டிக் கொள்கின்றார். ஜோசப் ராணியை தன்னுடைய லாரியில் கடத்திச் சென்று தன்னுடைய வீட்டில் தன் மனைவியிடம் ஒப்படைத்து விடுகிறார்.
ஜோசப் பின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட ஜோசப் பின் மனைவி அவரோடு குழந்தையோடு ராணியும் கூட்டிக்கொண்டு வெளியூர் சென்று விடுகிறார். வியாபாரத்திற்காக சென்று விட்டு திரும்பி வரக்கூடிய ஜோசப் வீட்டில் மனைவி மக்கள் இல்லாததையும் அவர்கள் ராணியை கூட்டிக்கொண்டு சென்று விட்டதையும் புரிந்து ஊரெங்கும் தேடுகின்றார். அவரைப்போலவே எஜமான் வேலனும் ராணியும் லாரி ஓட்டுனரான ஜோசப்பியும் தேடிக் கொண்டிருக்கிறார்.
ராணியின் காதலரான தாசப்பன் மனைவியை ஒரு கல்குவாரியில் சந்திக்கின்றான். அவள் மூலமாக தாசப்பண்ணுக்கும் ராணிக்கும் திருமணம் நடக்கிறது. இதற்கிடையே ஜோசப் ராணி இருக்கும் ஊரை அறிந்து கொள்கிறார்.. வேலனும் ஜோசப் பின் மூலமாக ராணி இருக்கும் ஊருக்கு வருகிறார்கள். இருவர் இடையேயும் சண்டை மூழ்கிறது. தாசப்படும் ராணியும் ஜோசப்பின் மனைவி மற்றும் அவருடைய கைக்குழந்தையும் சிகப்பு நிற சரக்குந்தில் அவ்வூரை விட்டு தப்பிக்கின்றனர். ஆனாலும் வேலனும் ஜோசப்பும் அந்த லாரியின் பின்பக்கமாக ஏறி சண்டையிட்டுக் கொள்கின்றனர். வேகமாக வண்டியை ஓட்டிச் செல்லக்கூடிய தாசப்பன் புதர் நிறைந்து இருக்கும் இடத்தில் ராணியையும் ஜோசப்பின் மனைவியையும் கைக்குழந்தையும் குதித்து விடச் சொல்கின்றார். அவரும் வேகமாக லாரியை ஓட்டிக் கொண்டே குதித்து விடுகின்றார்.
வேகமாக சென்ற சரக்குந்து தடுப்பை மீறி மழையில் இருந்து விழுந்து வெடித்து சிதறுகின்றது அதிலிருந்து ஜோசப் வேலனும் இறந்து போகின்றார்கள் அவர்கள் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை தாசப்பன் ராணி தம்பதியர் தங்கள் குழந்தையோடு மகிழ்வோடு வாழ்கின்றனர்..[1]
நடிகர்கள்
- தாசப்பனாக பிரதாப் போத்தன்
- வேலனாக அச்சன்குச்சு
- ஓசெப்பாக பாலன் கே. நாயர்
- இராணியாக நித்யா
- சங்கராடி
- பகதூர்
- மீனா
- அம்முவாக சாந்தகுமாரி
இசை
ம. சு. விசுவநாதன் இசையமைத்த இப்படத்தின் பாடல் வரிகளை பூவாச்சல் காதர் எழுதியுள்ளார்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "அறிஞ்சு நாம் தம்மில்" | சு. சானகி, கூட்டாக பாடுதல் | பூவாச்சல் காதர் | |
2 | "கன்னிப்பூவினின்னு கல்யாணம்" | பி. சுசீலா, சாலி ஆபிரகாம் | பூவாச்சல் காதர் |
மேற்கோள்கள்
- ↑ "Bharathan" பரணிடப்பட்டது 25 மே 2011 at the வந்தவழி இயந்திரம். Cinemaofmalayalam.net. Retrieved 9 March 2011.