லலிதா சிவகுமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லலிதா சிவகுமார்
Lalitha Sivakumar
Lalitha Sivakumar.jpg
லலிதா சிவகுமார்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லலிதா
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை ஆசிரியர், ஆசிரியர், வாய்ப்பாட்டு கலைஞர்,
இசைத்துறையில்1966 - முதல்

லலிதா சிவகுமார் (Lalitha Sivakumar) என்பவர் ஒரு முதன்மையான கர்நாடக இசை ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் தனது மாமியார் மற்றும் பிரபல கர்நாடக இசைப் பாடகர், மறைந்த டி. கே. பட்டம்மாள், இசை நிகழ்ச்சிகளில் வாய்ப்பாட்டுக் கலைஞராக இவர் அறியப்படுகிறார். [1] லலிதா சிவகுமார் இந்திய இசையில் ஒரு முக்கிய பாடகரான டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவனின் தாய் மற்றும் குரு என்றும் பிரபலமாக அறியப்படுகிறார். [2] இவர் டி. கே. பி கர்நாடக இசை பள்ளியின் மிகவும் பிரபலமான மூத்த குரு (ஆசிரியர்) ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

லலிதா சிவகுமாரின் தந்தை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் ஆவார். அவர் கர்நாடக இசை துறையில் மூத்த மிகவும் புகழ்பெற்ற மிருதங்க வித்வான் ஆவார். மேலும் சங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூசண் விருதுகளை பெற்ற முதல் மிருதங்க வித்தானும் ஆவார். லலிதா சிவகுமார் தன் 18 வயதில் டி. கே. பட்டம்மாளின் மகன் ஐ. சிவகுமாரை மணந்தார். திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்து, டி. கே. பட்டம்மளிடமிருந்து கர்நாடக இசையில் பயிற்சி பெற்றத் துவங்கினார். [1]

தொழில்

அதன்பிறகு, விரைவில் ஒரு தனிப் பாடகராகவும், டி. கே. பட்டம்மளுடன் சேர்ந்து பாடுபவராகவும் மிளிர்ந்தார். மேலும் டி. கே. ஜெயராமன், கே. வி. நாராயணசாமி, எம். எஸ். சுப்புலட்சுமி உள்ளிட்ட பல முன்னணி கர்நாடக இசைப் பாடகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். இருப்பினும், ஒரு தனிப் பாடகராக இவர் குறைந்த காலமே பாடியுள்ளார். பெரும்பாலும் தன் இவரது குருவுடன் சேர்ந்தே குரல் கொடுத்துள்ளார். [1]

லலிதா சிவகுமார் பல்வேறு இந்திய மொழிகளில் பல கிருதிகள், தில்லான்கள் மற்றும் பஜனைகளைகளுக்கு இசை அமைத்துள்ளார்.

பல அமைப்புகள் திருமதி. லலிதா சிவகுமாரின் திறமை மற்றும் கர்நாடக இசை உலகிற்கு அளித்த பங்களிப்புகளை அங்கீகரித்துள்ளன. சமீபத்தில், இந்த இசை மரபு தொடர்ச்சியை அங்கீகரிப்பததா, மெட்ராஸ் சவுத் லயன்ஸ் நற்பணி மன்றம் & ரச - ஏ. ஆர். பி. ஐ. டி. ஏ - இந்திய நாடகக் கலைகளின் ஆராய்ச்சி மற்றும் செயல்திறனுக்கான அகாடமியானது 2016 சனவரி 4 அன்று லலிதா மற்றும் ஐ. சிவகுமார் ஆகிய இருவருக்கும், 'இசை ரச மாமணி' என்ற பட்டத்தை வழங்கியது.

லலிதா சிவகுமாரின் ஆசிரியர் வாழ்க்கையானது பெரும் வெற்றியாகும். லலிதா சிவகுமார் தலைமையில் செயல்படுவது டி. கே. பி கர்நாடக இசை பள்ளி ஆகும். ஒப்பீட்டளவில், இந்த பள்ளியானது உலகம் முழுவதும் இருந்தும் மாணவர்களைப் பரவலாக கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் நடிப்புக் கலைஞர்களாக மாறியதாகக் கூறப்படுகிறது. இவரிடமிருந்து இசை கற்ற மாணவர்கள் உலகின் பல பகுதிகளில் நல்ல ஆசிரியர்களாக பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்தத் துறையில் ஒரு மூத்த ஆசிரியராகக் கருதப்படும் இவர், டி.கே.பியின் இசை மரபுகளை உலகளவில் பல மாணவர்கள் வழியாக அனுப்பி வருகிறார். இவரது கற்பித்தல் முறை தனித்துவமானது என்று கூறப்படுகிறது. பல புகழ்பெற்ற அறிஞர்களால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட கர்நாடக இசையின் மரபுகளை கடைபிடிப்பதை இவர் வலியுறுத்துகிறார், மொழிக்கு இவர் முக்கியத்துவம் அளிக்கிறார், கலைஞர்களின் உச்சரிப்பு மற்றும் நிகழ்த்துகை திறன்களுக்காக நன்கு அறியப்படுகிறார்.

இவர் மாணவர்களுக்கு நேரடியாகவும், இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மாணவர்களுக்கும் மேம்பட்ட கர்நாடக வாய்பாட்டு பயிற்சி அளித்துள்ளார். லலிதா சிவகுமாரின் சீடர்களாக டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் மட்டுமல்லாமல், லலிதா லாவண்ய சுந்தரராமன் (இவரது பேத்தி), [1] டாக்டர் நிரஞ்சனா சீனிவாசன், [3] பல்லவி பிரசன்னா, [4] நளினி கிருஷ்ணன், மகாராஜபுரம் சீனிவாசன், டாக்டர் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர். [5]

இவரது இசை அறிவுக்கு சான்றாக, இந்தியாவில் ஆண்டு முழுவதும் நடைபெறும் பல கர்நாடக இசை போட்டிகள் மற்றும் பக்தி இசை போட்டிகளுக்கு லலிதா சிவகுமார் நடுவராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "The Hindu : Friday Review Chennai - Columns : Life time bond with music". Archived from the original on 2013-09-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  2. The Hindu : Entertainment Bangalore - Music : Proud pedigree is not all பரணிடப்பட்டது 2010-02-04 at the வந்தவழி இயந்திரம்
  3. The Hindu : Arts / Music : Confident and comfortable
  4. The Hindu : Friday Review Chennai / Music : Judicious selection of songs பரணிடப்பட்டது 2010-02-04 at the வந்தவழி இயந்திரம்
  5. "The Hindu : Well articulated concert". Archived from the original on 2004-09-08. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
"https://tamilar.wiki/index.php?title=லலிதா_சிவகுமார்&oldid=7539" இருந்து மீள்விக்கப்பட்டது