ரேலங்கி செல்வராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரேலங்கி 1978 ஆம் ஆண்டு பரத நாட்டிய உடையில்

ரேலங்கி செல்வராஜா (1960ஆகஸ்ட் 12, 2005) இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரைப்பட நடிகையாகவும் இருந்த இவர் ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1]

சரிதம்

ரேலங்கி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவராவார். இவரோடு சேர்த்துக் கொலை செய்யப்பட்ட சின்னதுரை செல்வராஜாவை மணந்தார். இத்தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அக்குழந்தை பெற்றோர்களின் இறப்பின் போது ஒரு வயது மட்டுமே அடைந்திருந்தது.[2]

ஊடகவியலாளராக

1978 இல் இலங்கையில் தயாரிக்கப்பட்ட்ட தெய்வம் தந்த வீடு என்ற திரைப்படத்தில் இவர் முதன்மை வேடம் ஏற்று நடித்தார். இதற்காக இவர் சிறந்த நடிகை விருதுக்கு முன்மொழியப்பட்டார்.[2] இவர் 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒலிபரப்பான மணிக்குரல் வானொலியில் தனது ஊடக வாழ்க்கையை தொடங்கிய ரேலங்கி 1983 வரை அதில் பணியாற்றினார் .1987 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்த இவர் 2000 ஆம் ஆண்டு முதல் முதுநிலை அறிவிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளாராகவும் செய்தி வாசிப்பவராகவும் இணைந்தார். இறப்பின் போது இவர் இ.ரூ.கூ.வில் கட்டற்ற பணியாளராக இருந்தார்.[2] இவர் இ.ஒ.கூ.வில் ஒலிபரப்பாகிவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் ஆதரவளிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் இதயவீணை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது செயல்களுக்கும் எதிரான கருத்துக்களை கொண்டதாகும்.[3]

கொலை

ரேலங்கியும் அவரது கணவரும் கணவரின் வணிக நிலையத்தில் இனந்தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட அதே நாளில் இக்கொலைகளும் நடைபெற்றன. இம்மூன்று கொலைகளுக்கும் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அவர்கள் அதை மறுத்திருந்தார்கள்.[3]

ரேலங்கியின் கணவர் முன்னாள் ஆயுதக்குழுவும் இப்போது அரசியல் கட்சியாக விளங்கும் தமிழர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராவார். இக்கட்சி விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டது என டெயிலி மிரர் பத்திரிகை கொலை தொடர்பான செய்திக் குறிப்பில் வெளியிட்டிருக்கிறது.[3]

இவற்றையும் பார்க்க

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரேலங்கி_செல்வராஜா&oldid=10186" இருந்து மீள்விக்கப்பட்டது