ரேணு சலுஜா
| ரேணு சலுஜா | |
|---|---|
| பிறப்பு | 5 சூலை 1952 தில்லி, இந்தியா[1] |
| இறப்பு | 16 August 2000 (aged 48) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | திரைப்படத் தொகுப்பு |
| செயற்பாட்டுக் காலம் | 1980–2000 |
| வாழ்க்கைத் துணை |
|
| உறவினர்கள் | இராதா சலுஜா (சகோதரி) |
ரேணு சலுஜா (Renu Saluja) (5 சூலை 1952 - 16 ஆகத்து 2000) இந்தியத் திரைப்படப் படத்தொகுப்பாளர் ஆவார். 1980-1990களில், கோவிந்த் நிகலானி, விது வினோத் சோப்ரா, சுதிர் மிசுரா, சேகர் கபூர், மகேசு பட், விஜய் சிங் உள்ளிட்ட முக்கிய இயக்குநர்களுடனும், பாலிவுட் கலை இயக்குநர்களுடனும் இவர் பணியாற்றினார். இவர், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளார்.[2]
ரேணு, பரிந்தா (1989), தாராவி (1993), சர்தார் (1993), காட்மதர் (1999) ஆகிய படங்களுக்கு சிறந்த படத் தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றுள்ளார். மேலும், பரிந்தா (1989), 1942: எ லவ் ஸ்டோரி (1994) படங்களுக்கு சிறந்த படத்தொகுப்பிற்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.[3]
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
ரேணு, பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1974-இல் புனேயில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்தார். ஆனால், இவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக, படத்தொகுப்புப் பிரிவில் சேர்ந்து 1976-இல் பட்டம் பெற்றார். பின்னர், திரைப்படத் தொகுப்பாளராக தனதுத் தொழிலைத் தொடங்கினார். இந்த நேரத்தில் இந்த துறையில், ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.[4][5]
தொழில்
இவர் முதலில் விது வினோத் சோப்ராவின் மர்டர் அட் மங்கி ஹில் (1976) திரைப்படத்தில் பணியாற்றினார். இப்படத்தில் இவர் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.[6] இந்தத் திரைப்படம் 1977-78 இல் சிறந்த பரிசோதனைத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[7] திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் பயிற்சி முடிந்து வெளியேறியதும், ரேணு தன்னுடன் படித்த சயீத் அக்தர் மிர்சாவின் ஆல்பர்ட் பின்டோ கோ குஸ்ஸா கியோன் அதா ஹை (1980), அதைத் தொடர்ந்து விது வினோத் சோப்ராவின் சசயே மாட் (1981), பின்னர் மற்றொரு வகுப்புத் தோழன் குந்தன் ஷாவின் நகைச்சுவை திரைப்படமான, ஜானே பி தோ யாரோ (1983), போன்றவற்றில் பணியாற்றினார். இவையனைத்தும் இவருக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத் தந்தது.[8]
பிறகு, தூர்தர்ஷனுடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
1990களில் ஹைதராபாத் புளூஸ் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்த புதிய சுயாதீனத் திரைப்படங்களில் பணியாற்றினார். ஜானே பி தோ யாரோன் (1983), கபி ஹான் கபி நா (1993), பாண்டிட் குயின் (1995), ஜெய கங்கா (1996), பர்தேஸ் (1997), ராக்ஃபோர்ட் (1999), ராம் (2000) ஹே ராம் ஆகியன இவர் பணியாற்றிய சில குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள் ஆகும். நாகேஷ் குகுனூரின் பாலிவுட் காலிங் மற்றும் இறுதியாக 2003 இல் வெளியான கல்கத்தா மெயில் இவர் கடைசியாக பணிபுரிந்த திரைப்படம் ஆகும்.[9]
சொந்த வாழ்க்கை
இவரது மூத்த சகோதரி இராதா சலுஜா ஒரு திரைப்பட நடிகை ஆவார். அவர் ஏராளமான இந்தி, பஞ்சாபி மற்றும் பிற பிராந்தியத் திரைப்படங்களில் பணிபுரிந்தார். இவரது தங்கை மருத்துவர் குங்கும் கதாலியா ஒரு சிறப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர். ரேணு தன்னுடன் கல்லூர்யில் படித்த இயக்குநர் விது வினோத் சோப்ராவை மணந்தார். இவர்கள் ஜானே பி தோ யாரோன் (1983) படத்தில் ஒன்றாக வேலை செய்தனர். இவர்கள் பிரிந்தாலும், ரேணு அவரது அனைத்து திரைப்படங்களிலும் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார். மேலும், அவரது உதவி இயக்குநராகவும் இருந்தார்.தாராவி மற்றும் இஸ் ராத் கி சுபா நஹின் (1996) உட்பட பல படங்களில் இயக்குநர் சுதிர் மிசுராவுடன் பணிபுரிந்தார்.[10][11]
இறப்பு
வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரேணு, ஆகத்து 16, 2000 அன்று மும்பையில் இறந்தார்.[12]
மேலும் படிக்க
- ↑ Encyclopaedia Of Hindi Cinema, p. 620
- ↑ "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-17.
- ↑ Cut to perfection-Invisible: The Art of Renu Saluja deconstructs the late film editor[தொடர்பிழந்த இணைப்பு] Indian Express, 31 August 2006.
- ↑ Women break into another male bastion in Bollywood சிஃபி, 2009-03-12.
- ↑ Invisible: the art of Renu Saluja பரணிடப்பட்டது 2007-01-07 at the வந்தவழி இயந்திரம் GraFTII.
- ↑ Murder At Monkey Hill (35mm / B&W / 35 min)
- ↑ Vidhu Vinod Chopra’s diploma film was Murder at Monkey Hill (1976),... The Tribune, 5 August 2007.
- ↑ Film editor Renu Saluja dead தி டிரிப்யூன், 17 August 2000.
- ↑ Nasseruddin Shah releases book on Renu Saluja Businessofcinema. 1 September 2006.
- ↑ 'Editing for her was like cooking' ரெடிப்.காம் Movies, 17 August 2000.
- ↑ Straight Answers: Sudhir Mishra, Filmmaker on Indian cinema TNN, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 24 April 2006.
- ↑ Film editor Renu Saluja dead The Tribune, 17 August 2000.
மேற்கோள்கள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரேணு சலுஜா
- Shekhar Kapur on Renu Saluja in his blog பரணிடப்பட்டது 2006-08-05 at the வந்தவழி இயந்திரம்
- The nimble tightrope walker (Excerpts from GRAFTII Book, Invisible: the art of Renu Saluja) at Screen (magazine)
- GRAFTII Book, Invisible: the art of Renu Saluja பரணிடப்பட்டது 2007-01-07 at the வந்தவழி இயந்திரம்