ரெட்ட தல
| ரெட்ட தல | |
|---|---|
திரைப்பட பதாகை | |
| இயக்கம் | கரிஸ் திருக்குமரன் |
| தயாரிப்பு | பாப்பி பாலசந்திரன் |
| கதை | கரிஸ் திருக்குமரன் |
| இசை | சாம் சி. எஸ். |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | டிஜோ டோமி |
| படத்தொகுப்பு | ஆண்டோனி |
| கலையகம் | பிடிஜி யுனிவர்சல் |
| வெளியீடு | 25 டிசம்பர் 2025 |
| ஓட்டம் | 113 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ரெட்ட தல என்பது வெளிவரவிருக்கும் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கரிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். அருண் விஜய், சித்தி இதானி, தன்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைச் சுருக்கம்
காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி) ஆகிய இருவரும் அனாதைகள். இருவரும் சிறு வயதில் எதிர்ச்சியாக சந்தித்து நட்பு கொள்கிறார்கள். பாண்டிச்சேரியைச் சேர்ந்த காளி, வேலைக்காக ஊரைவிட்டு சென்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறான். ஆனால் ஆந்த்ரே பணத்தின் மீது அதீத ஆசை கொண்டவளாக மாறி, காதலை விட பணம் முக்கியம் என்று நிபந்தனை வைக்கிறாள்.
காளி மல்பே உபேந்திரா என்ற பணக்காரரை சந்திக்கிறான். அவன் தன்னைப் போலவே தோற்றமளிக்கிறான். காளியும் ஆந்த்ரேயும் உபேந்திராவைக் கொலை செய்து அவனது அடையாளத்தை எடுத்துக்கொண்டு அவனது செல்வத்தைப் பெற திட்டமிடுகிறார்கள்.
பின்னர், உபேந்திரா வெறும் சாதாரண மனிதர் அல்ல என்பது வெளிப்படுகிறது. அவரது உண்மையான இயல்பு படத்தின் முக்கிய திருப்பத்தை உருவாக்குகிறது. காளி எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ஆள் மாறாட்டம் ஆகியவை கதையின் மீதி பகுதி.
கதை மாந்தர்கள்
- அருண் விஜய் (இரட்டை வேடம்)
- மல்பே உபேந்திரா
- காளி
- சித்தி இத்னானி - ஆந்த்ரே
- தன்யா இரவிச்சந்திரன்
- யோகேஷ்
- ஜான் விஜய்
- ஹரீஷ் பேரடி
- பாலாஜி முருகதாஸ்
தயாரிப்பு
இப்படத்தின் படபிடிப்பு ஏப்பிரல் 2024இல் தொடங்கியது.[2] படத்தின் முதல் தூண்டோட்டம் 7 ஆகத்து 2025இல் வெளியானது.[3] படத்தின் இசை உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.[4] திசம்பர் 25, 2025இல் திரைப்படம் வெளியானது.[5]
விமர்சனங்கள்
தினமணி நாளிதழில் வந்த விமர்சனத்தில், "ரெட்ட தல - இரண்டு தலை இருந்தால் எவ்வளவு பலமோ அவ்வளவு வலியும் இருக்கிறதல்லவா?!" என்று எழுதி படிமம்:Star full.svgபடிமம்:Star full.svgபடிமம்:Star empty.svgபடிமம்:Star empty.svgபடிமம்:Star empty.svg பதிப்பீடுகளை வழங்கினர்.[6] ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை" என்று எழுதினர்.[7]
மேற்கோள்கள்
- ↑ "Retta Thala (15)". British Board of Film Classification (in ஆங்கிலம்). 22 December 2025. Retrieved 22 December 2025.
- ↑ பிரிவு, இணையதளச் செய்திப் (7 ஆகத்து 2025). "ரெட்ட தல டீசர்!". Dinamani. Retrieved 2025-09-07.
- ↑ T-Series Tamil (7 ஆகத்து 2025), Retta Thala Official Teaser | Arun Vijay | Siddhi | Tanya | Kris Thirukumaran | Sam CS | Bobby | BTG, retrieved 2025-09-07
- ↑ "Instagram". www.instagram.com. Retrieved 2025-09-07.
- ↑ செய்திப்பிரிவு (2025-12-17). "'ரெட்ட தல' கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி". Hindu Tamil Thisai. Retrieved 2025-12-17.
- ↑ சிவசங்கர் (2025-12-25). "பரபரப்பான கதை, ஆனால்! அருண் விஜய்யின் ரெட்ட தல - திரை விமர்சனம்!". Dinamani. Retrieved 2026-01-01.
- ↑ டீம், விகடன் (2025-12-25). "ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!". vikatan.com/. Retrieved 2026-01-01.