ராம்குமார் (இயக்குநர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராம்குமார்
பிறப்புதமிழ்நாடு, திருப்பூர்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2014-தற்போதுவரை

ராம்குமார் (Ram Kumar) என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

தொழில்

திருப்பூரைச் சேர்ந்தவர் ராம்குமார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இவர் இயக்கிய ‘முண்டாசுப்பட்டி’ குறும்படம், பலரின் கவனம்பெற்றது. அதுதான் பின்னர் விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் ராமதாஸ் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த வெற்றிப்படமான முண்டாசுப்பட்டி (2014) படத்தின் இயக்குனராக அறிமுகமாக வழிவகுத்தது. இவர், யாரிடமும் உதவி இயக்கநராக பணிபுரியாதவராவார்.[1]

அடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, அமலாபால், ராமதாஸ், சரவணன் ஆகியோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்த ராட்சசன் (2018) படத்தை இரண்டாவதாக இயக்கினார். இப்படம் 2018 அக்டோபர் 5 அன்று வெளியானது.[2]

அடுத்து தனுஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.[3][4]

திரைப்படங்கள்

ஆண்டு படம் இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர் விருதுகள் குறிப்புகள்
2014 முண்டாசுப்பட்டி Green tickY Green tickY Red XN
2018 ராட்சசன் Green tickY Green tickY Red XN
2019 பெயரிடப்படாத தனுஷ் படம் Green tickY Green tickY Red XN

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராம்குமார் (இயக்குநர்)

"https://tamilar.wiki/index.php?title=ராம்குமார்_(இயக்குநர்)&oldid=21215" இருந்து மீள்விக்கப்பட்டது