ராஜதந்திரம் (2015 திரைப்படம்)
ராஜதந்திரம் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜி. அமித் |
தயாரிப்பு | சன்லேண்ட் சினிமாஸ் ஒயிட் பக்கெட் புரொடக்சன்ஸ் |
கதை | ஏ. ஜி. அமித் |
இசை | பாடல் ஜி. வி. பிரகாஷ் குமார் பின்னணி இசை சந்தீப் சௌதா |
நடிப்பு | வீரபாகு ரெஜினா கசான்ட்ரா இளவரசு ஆடுகளம் நரேன் பட்டியல் கே. சேகர் தர்புகா சிவா அஜய் பிரசாத் |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். கதிர் |
படத்தொகுப்பு | பிரவீன் ஆண்டனி |
கலையகம் | சன்லேண்ட் சினிமாஸ் ஒயிட் பக்கெட் புரொடக்சன்ஸ் |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | மார்ச்சு 13, 2015 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜதந்திரம் (Rajathanthiram) 2015 ஆம் ஆண்டு ஏ. ஜி. அமித் இயக்கத்தில் வீரபாகு மற்றும் ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சன்லேண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கெட் புரொடக்சன்ஸ் ஆகியோர். இப்படத்தின் விநியோக உரிமையை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் பெற்றது. எஸ். ஆர். கதிரின் ஒளிப்பதிவில், பிரவீன் ஆன்டனியின் படத்தொகுப்பில், விதேஷின் தயாரிப்பு வடிவமைப்பில், சில்வாவின் சண்டைப்பயிற்சியில் இப்படம் உருவானது. இப்படம் அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கத்திற்காகப் பாராட்டப்பட்ட வெற்றிப்படமாகும். 13 மார்ச் 2016 இல் இப்படக்குழு ராஜதந்திரம் 2 படத்தின் முதல் 6 நிமிடக்காட்சிகளை யூடியூப்-இல் வெளியிட்டது.[1] இப்படம் கன்னடத்தில் பாண்டா (2017) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
கதைச்சுருக்கம்
நேர்மையானவரான தர்மராஜை (ஆடுகளம் நரேன்) நிதிநிறுவன மோசடியில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புகிறான் அழகப்பன் (பட்டியல் கே. சேகர்). பல ஆண்டுகளுக்குப் பின் சிறையிலிருந்து திரும்பும் தர்மராஜ் மிகப்பெரிய நகைக்கடையை நடத்திவரும் பணக்காரனாக மாறிவிட்ட அழகப்பனை பழிவாங்க அவன் கடையைக் கொள்ளையடிக்க மாதவ அய்யரிடம் (இளவரசு) உதவி கேட்கிறார். மாதவ அய்யர் பிறரை ஏமாற்றுதல், சிறு திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் அர்ஜுன் (வீரபாகு) மற்றும் அவனது இரண்டு நண்பர்களிடம் அழகப்பன் நகைக்கடையைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைச் சொல்ல அதை முதலில் மறுக்கும் அர்ஜுன் பிறகு அதை செய்ய ஒத்துக்கொள்கிறான். அதை எப்படி செய்து முடித்தான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
நடிகர்கள்
- வீரபாகு - அர்ஜுன் பார்த்திபன்
- ரெஜினா கசான்ரா - மிச்செல் டி'மெல்லோ
- பட்டியல் கே. சேகர் - அழகப்பன்
- தர்புகா சிவா - அஸ்டின் டி'கோஸ்டா (குள்ளன்)
- இளவரசு - சேது மாதவன்
- அஜய் பிரசாத் - தேவராஜ் சாரதி
- ஆடுகளம் நரேன் - தர்மராஜ்
தயாரிப்பு
தி இந்து: திரைக்கதை றெக்கை கட்டிப் பறப்பது படத்தின் பலம். திரைக்கதையின் வேகத்தையும், போக்கையும் புரிந்துகொண்ட பிரவீண்குமாரின் படத்தொகுப்பு, சந்தீப் சவுதாவின் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு பெரிதும் துணை நிற்கின்றன.[2]
விகடன்: சம்பந்தப்பட்டவருக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி, கொள்ளையடிக்கும் திருட்டு வியூகமே... 'ராஜதந்திரம்!’.[3]
தமிழ் வெப்டுனியா : ராஜதந்திரம் திரைப்படம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. படத்தை அமித் இயக்கியிருந்தார்.[4]
சினி ஐகான் :இயக்குநர் அமித் துக்கு இது முதல்படம். நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்ல வந்த செய்தியைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்.[5]
ஈ-தந்தி : புது இயக்குனர் படம் என்ற உணர்வு இல்லாமல் பெரிய இயக்குனர் படம் என்ற உணர்வைத் தருகிறது படம். ராஜதந்திரம் - ராஜநடை.
தமிழ் டாக்கீஸ் : காணொளி விமர்சனம்.[6]
இசை
படத்தின் பின்னணி இசை சந்தீப் சவுதா. படத்தில் இடம் பெற்ற ஒரே பாடலுக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
1 | ஏன் இந்த பார்வைகள் | ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி |
வெளியீடு
படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் விஜய் தொலைக்காட்சிப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "ராஜதந்திரம் 2 - முதல் 6 நிமிடக் காணொளி".
- ↑ "தி இந்து - விமர்சனம்". https://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6995706.ece.
- ↑ "விகடன் - விமர்சனம்".
- ↑ "ராஜதந்திரம் இயக்குனர் அமித்". https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vimal-next-movie-with-amith-116112200029_1.html.
- ↑ "சினி ஐகான் விமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காணொளி விமர்சனம்".