ராஜகோபால தொண்டைமான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜகோபால தொண்டைமான்
Raja of Pudukkottai
முன்னையவர்மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
பின்னையவர்ர. ராஜகோபால தொண்டைமான்
திவான்கள்ரகுநாத பல்லவராயர்,
டி. ராகவைய்யா,
அலெக்ஸாண்டர் டோடென்ஹேம,
கருணாகர மேனன்
பிறப்பு(1922-06-23)சூன் 23, 1922
புதுக்கோட்டை, புதுக்கோட்டை சமஸ்தானம்
இறப்புசனவரி 16, 1997(1997-01-16) (அகவை 74)
புதுக்கோட்டை
மரபுதொண்டைமான்

ராஜகோபால தொண்டைமான் (23 ஜூன் 1922 - 16 சனவரி 1997) புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஆவார்.[1] புதுக்கோட்டையின் கடைசி மன்னரான ராஜராஜகோபால தொண்டைமான் பிரிட்டிஷ் அரசால் 6 வயதில் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ராஜகோபால தொண்டைமான், 1928 முதல் 1948 வரை மன்னராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில், 1930ஆம் ஆண்டு 'புதிய அரண்மனை’ எனும் பெயர் கொண்ட அரண்மனை கட்டப்பட்டது. இந்தோ- செராசெனிக் திராவிட கட்டடக்கலையில் கட்டப்பட்ட இந்த அரண்மனை தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இயங்கி வருகிறது.[2]

மேற்கோள்கள்

  • "Pudukkottai 4". Tondaiman Dynasty. Christopher Buyers.
"https://tamilar.wiki/index.php?title=ராஜகோபால_தொண்டைமான்&oldid=130177" இருந்து மீள்விக்கப்பட்டது