ராசி அழகப்பன்
இந்தக் கட்டுரையில் ஒரு ரசிகரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகத் தெரிகிறது. |
ராசி அழகப்பன் | |
---|---|
பிறப்பு | சி. அழகப்பன் 12 மார்ச்சு 1959 ராயம்பேட்டை, தமிழ்நாடு, |
இருப்பிடம் | திருவண்ணாமலை மாவட்டம் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2008 – இன்று வரை |
பெற்றோர் | சின்னசாமி, பங்காரு அம்மாள் |
துணைவர் | சகோதரிகள் உண்ணாமலை, விஜயா |
வாழ்க்கைத் துணை | சண்பகவடிவு |
பிள்ளைகள் | ராஜா |
விருதுகள் | வண்ணத்துப்பூச்சி - திரைப்படம் - தமிழக அரசு விருது |
சி. அழகப்பன் (பிறப்பு: 12 மார்ச் 1959) ராசி அழகப்பன் இந்தியத் திரைப்படத் துறையில் அழுத்தமான தடம்பதித்த இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார். இவர் சிறுவர்களுக்காக இயக்கிய வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படம், தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான படம் என்ற விருதைப் பெற்றது. தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரிகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. பல கவிதைகள்,[1] கட்டுரைகள்[2] மற்றும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.[3][4] தாய் வார இதழின் துணை ஆசிரியராகவும், மய்யம் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அன்னம் விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது, தினமணி, ஆனந்த விகடன், அரும்பு பத்திரிகைகளின் சார்பாக சிறந்த கதைகளுக்கான பரிசு மற்றும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதைப் பெற்றுள்ளார். பள்ளிக் காலங்களில் உவமைக் கவிஞர் சுரதா கரங்களால் கவிதைக்கான பரிசு பெற்ற இவர், கல்லூரிக் காலத்தில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் கவிதைக்கான பரிசையும் பெற்றுள்ளார். வலம்புரிஜான் அவர்கள் இவரை தமிழ் வாழ வைக்காவிட்டாலும், இவன் தமிழை வாழ வைக்காமல் விடமாட்டான். இந்த கோப்பகார எழுத்தாளனின் ஆறாவது விரலை முத்தமிடுகிறேன் என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். குறுந்தகட்டில் வெளியான பாரதிதாசன் வாழ்வும், படைப்பும் என்ற ஆங்கில காணொளிக்கும், சில திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயசரிதை
ராசி அழகப்பன் திருவண்ணாமலை மாவட்டம் ராயம்பேட்டை என்னும் சிற்றூரில் 1959இல் பிறந்தார். சொந்தத் தொழில் கைத்தறி நெசவு. பள்ளிப் படிப்பு வேட்டவலம் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், புகுமுக வகுப்பு கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரி திருவண்ணாமலையிலும, மாநிலக் கல்லூரி சென்னையில் இளங்கலை தமிழ் இலக்கியமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முதுகலை பொது நிர்வாகமும் படித்துள்ளார். தமது 15வது வயதில் முதல் கவிதை எழுதினார்.
பத்திரிகைத் துறை
- 1979இல் தேன் மழை மாணவர் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
- 1981இல் தாய் வார இதழில் ஐந்தாண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் வலம்புரிஜான் ஆசிரியராக இருந்தார்.
- பிறகு கல்கி, ஆனந்த விகடன், அரும்பு, தாமரை, செம்மலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார்.
- கலை இலக்கிய மேடைகள் மற்றும் கல்லூரி மேடைகள் வழியாக இவருக்கு குடிசை ஜெயபாரதி, பாலு ஆனந்த் மற்றும் பரிக்ஷா ஞானியுடன் தொடர்புகள் ஏற்பட்டது.
- பிறகு கமலஹாசன் நடத்திய மய்யம் இதழில் துணை ஆசிரியராகத் துவங்கி பின்னர் ஆசிரியராக பணியாற்றினார்.
திரைப்படத்துறை
- அபூர்வ சகோதரர்கள் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றினார்.
- தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன் மற்றும் விருமாண்டி போன்ற படங்களில் பணி செய்தார்.
- ஆர்.கே.செல்வமணி இயக்கிய மக்களாட்சி படத்திலும் உதவி இயக்குனராக பங்குபெற்றார்.
- பின்னர் மாஸ்டர் தேவராஜ், வண்ணத்துப்பூச்சி மற்றும் குகன் போன்ற படங்களை இயக்கினார்.
விருதுகள்
- சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான படம், வண்ணத்துப்பூச்சி - தமிழக அரசு விருது (2009)[சான்று தேவை]
- அன்னம் விருது (இலக்கிய வீதி)[சான்று தேவை]
- ஸ்டேட்[தெளிவுபடுத்துக] பேங்க் ஆஃப் இந்தியா இலக்கிய விருது[சான்று தேவை]
- கவிதை உறவு இலக்கிய விருது[சான்று தேவை]
- ஆனந்த விகடன் முத்திரைக் கதை[சான்று தேவை]
திரைப்பட பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | முக்கிய பங்களிப்பு | மேற்கோள்கள். | ||||
---|---|---|---|---|---|---|---|
இயக்குநர் | துணை இயக்குநர் | பாடலாசிரியர் | தயாரிப்பாளர் | நடிகர் | |||
மிஸ்டர் தேவராஜ் | |||||||
2009 | வண்ணத்துப்பூச்சி | தமிழக அரசு விருது பெற்ற படம்[சான்று தேவை] | |||||
2016 | குகன் | ||||||
1990 | மைக்கேல் மதன காமராஜன் | ||||||
1994 | மகளிர் மட்டும் | ||||||
2000 | ஜேம்ஸ் பாண்ட் |
சுவையான தகவல்கள்
- ராசி அழகப்பன் பார்வை என்ற யுடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
- அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் தொடர்பாக முன்னணி தொலைக்காட்சி உரையாடல்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
- அலுவலகப் பணியாளர்களுக்கு நேரம் மற்றும் ஒழுங்கு மேலாண்மைக்காக பயிற்சிகள் வழங்குகிறார்.
- இலக்கிய மேடைகள் மற்றும் இணைய நேரலைகளில் கலை இலக்கியம் தொடர்பாக உரையாற்றுகிறார்.
- அவ்வப்போது தொலைக்காட்சிகள் நடத்தும் பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்கிறார்.
திரைப் படைப்புகள்
- 1996: மிஸ்டர் தேவராஜ்
- 2009: வண்ணத்துப்பூச்சி[5]
- 2016: குகன்
- 1990: மைக்கேல் மதன காமராஜன்
- 1994: மகளிர் மட்டும்
- 2000: ஜேம்ஸ் பாண்டு
திரைப் பாடல்கள்
- 1996: மிஸ்டர் தேவராஜ் - மனசுக்குள்ளே - பாடியவர்கள் உன்னி கிருஷ்ணன், சித்ரா - இசை தேவா
- 2009: வண்ணத்துப்பூச்சி - மழை வரும் - பாடியவர் கிருஷ்ண ராஜு - இசை ரேஹான்
- 2009: வண்ணத்துப்பூச்சி - ஒரே ஒரு கிராமத்திலே - பாடியவர் பத்மப் பிரியா - இசை ரேஹான்
- 2009: வண்ணத்துப்பூச்சி - யாருக்குள் யாரோ - பாடியவர் பிரசன்னா - இசை ரேஹான்
- 2016: குகன் - முதல் முறை - பாடியவர்கள் கல்யாண், அம்ருதா - இசை குரு கல்யாண்
- 2016: குகன் - வாடா - பாடியவர்கள் அனந்து, பிரபா ஐயர் - இசை குரு கல்யாண்
- 2016: குகன் - தாயோ சேயா - பாடியவர் ஜெய ஸ்ரீ - இசை குரு கல்யாண்
- 2005: கேட்டவரெல்லாம் பாடலாம் - பார்வையினாலே கொல்லும் - பாடியவர்கள் ராஜலஷ்மி, கார்த்திக் - இசை ஆர்.டி.பர்மன்
- 2005: கேட்டவரெல்லாம் பாடலாம் - ஓ சிநேகிதி - பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா - இசை ஆர்.டி.பர்மன்
- 2005: கேட்டவரெல்லாம் பாடலாம் - வாடா என் நண்பா - பாடியவர் ஸ்ரீனிவாஸ் - இசை ஆர்.டி.பர்மன்
கவிதை நூல்கள்
- 1980: கை குலுக்கிக்கொள்ளும் காதல்
- 1983: குழல் தேடும் மலர்
- 1985: வசந்தநினைவுகள்
- 1994: புல்வெளிப்பாதை
- 1991: இப்படித்தான் காதல்
- 2004: உயிர்க்காற்று
- 2005: அழகான பூக்களுக்கு
- 2006: ம் - காதல் மொழி
- 2006: மழைத்தேன்
- 2006: கும்மிருட்டு
- 2018: தாய் நிலம்
- 2018: ராசி அழகப்பன் கவிதைகள்
- 2020: சொல்வதற்கு ஒன்னுமில்ல
சிறுகதைகள்
- 1982: கதவைத் திற காற்று வரட்டும்
- 1984: கனவுக்கு கால் முளைத்தது
- 2004: ஆகவே
- 2006: ஒரு
- 2008: ராசி அழகப்பன் சிறுகதைகள்
- 2020: அது சரி
குறு நாவல்
- 2002: அழகான ராட்சசியே
நாடகம்
கட்டுரைகள்
- 2000: இன்று முதல் கவிலையை மற
- 2001: எண்ணம் எழுத்து சமூகம்
- 2003: பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக
- 2007: இலக்கை அடைய 50 வழிகள்
- 2007: வாழ்க்கை வாழ்வதற்கே
- 2012: வென்றிடப் பிறந்தவள் பெண்
- 2012: சிறந்த விற்பனையாளராக
- 2015: வாழும்போதே வளமான வெற்றி
- 2015: இந்த வாழ்க்கை இனிதா
- 2018: கவனிக்க மறந்த காதல்
திரைக்கதை வசனம்
- 2009: வண்ணத்துப்பூச்சி
மேற்கோள்கள்
- ↑ "ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து". திண்ணை. https://puthu.thinnai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/. பார்த்த நாள்: 6 May 2022.
- ↑ அழகப்பன், ராசி (2021-10-06). "தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்". Uyirmmai (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
- ↑ "கமலின் கரிசனம்.. ராசி அழகப்பனின் ராசி!". Dinamalar. 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
- ↑ "சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்ந்தவர் பாரதியார்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jun/10/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3638871.html. பார்த்த நாள்: 6 May 2022.
- ↑ "பாராட்ட நிறைய இருந்தாலும், என்னவோ தளர்ச்சி இருக்கிறது: 'சூப்பர் டீலக்ஸ்' குறித்து இயக்குநர் ராசி அழகப்பன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
- ↑ "பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள் /ராசி அழகப்பன். Paḷḷi māṇavarkaḷukku 5 nimiṭa mēṭai nāṭakaṅkaḷ /Rāci Al̲akappan̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.