ரமணன் ராமகிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு டத்தோ
ரமணன் ராமகிருஷ்ணன்
YB Ramanan Ramakrishnan

DIMP
சிலாங்கூர் சுங்கை பூலோ மக்களவை
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 நவம்பர் 2022
பிரதமர் அன்வர் இப்ராகீம்
பெரும்பான்மை 2,693 (மலேசியத் தேர்தல் 2022)
சிறப்புக் குழு தலைவர்
மித்ரா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 ஏப்ரல் 2023
தனிநபர் தகவல்
பிறப்பு Ramanan Ramakrishnan
மலேசியா
அரசியல் கட்சி மஇகா (MIC)
பி.கே.ஆர் (PKR)
பிற அரசியல்
சார்புகள்
பாரிசான் (BN)
பாக்காத்தான் (PH)
பெற்றோர் தேவகி கிருஷ்ணன்
படித்த கல்வி நிறுவனங்கள் குயின்சுலாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆசுத்திரேலியா
பணி அரசியல்வாதி
இணையம் datoramanan.com

டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ([Ramanan Ramakrishnan; சீனம்: 拉马南·拉马克里希南); என்பவர் 2022 நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் சிலாங்கூர் சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியின் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார். பி.கே.ஆர் கட்சியின் தலைமை தகவல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கிறார்.[1][2]

2023 ஏப்ரல் 18-ஆம் தேதி முதல், மலேசியப் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவின் சிறப்புத் தலைவராகவும் (MITRA) டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றுள்ளார்.[3]

மித்ரா

மித்ரா செயற்குழுவுக்கான புதிய நியமனங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் 2023 ஏப்ரல் 18-ஆம் தேதி அறிவித்தார். மஇகாவின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன், கிள்ளான் மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதிராவ் விருமன், சிகாமட் மக்களவை தொகுதி உறுப்பினர் யுனேசுவரன் ராமராஜ் மற்றும் மித்ரா தலைமை இயக்குனர் ரவிந்திரன் நாயர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மலேசிய இந்தியச் சமூகத்தில், குறிப்பாக B40 குழுவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு அரசாங்கப் பிரிவாக மித்ரா எனும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவு 2019-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த அமைப்பு, இந்திய சமூகப் பிரிவின் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (செடிக்) என்று அழைக்கப் பட்டது.

தேர்தல் முடிவுகள் 2022

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ மக்களவை தொகுதியில் ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

மலேசியாவின் ஆளும் கட்சியாக விளங்கிய பாரிசான் கூட்டணியின் மூத்த அரசியல்வாதியான கைரி சமாலுடின்; 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ரமணன் ராமகிருஷ்ணனிடம் 2,693 வாக்குகளில் தோல்வி கண்டார். கைரி சமாலுடின், பாரிசான் கூட்டணியில் அம்னோ கட்சியின் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் ஆகும்.

மேலும், மலேசிய சுகாதார அமைச்சர்; மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்; மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய அமைச்சர் பதவிகளை வகித்தவர் ஆகும்.

மலேசிய நாடாளுமன்றம்
ஆண்டு தொகுதி வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2022 P107 சுங்கை பூலோ, சிலாங்கூர் ரமணன்
ராமகிருஷ்ணன்

(பி.கே.ஆர்)
50,943 39.30% கைரி சமாலுடின்
(அம்னோ)
48,250 37.22% 130,846 2,693 82.00%
முகமட் கசாலி அமின்
(பாஸ்)
29,060 22.42%
அக்மால் யூசோப்
(பெஜுவாங்)
829 0.64%
அகமட் சூரி பைசால்
(மக்கள் கட்சி)
279 0.22%
சையது ரசாக் அலசுகோ
(சுயேச்சை)
165 0.13%
நுர்சிலிண்டா பாசிரி
(சுயேச்சை)
113 0.09%

மேற்கோள்கள்

  1. "Ramanan is an active dedicated member of Parti Keadilan Rakyat (PKR); Deputy Information Chief I (PKR)". datoramanan.com. பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
  2. Calon PRU Ramanan Ramakrishnan
  3. "Ramanan Ramakrishnan appointed new Mitra chief". The Star. 18 April 2023. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரமணன்_ராமகிருஷ்ணன்&oldid=25152" இருந்து மீள்விக்கப்பட்டது