தேவகி கிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு டான் ஸ்ரீ
தேவகி கிருஷ்ணன்
Devaki Krishan

PSM; JMN; AMN
கோலாலம்பூர் நகராட்சி
நிர்வாக ஆணையர்
பதவியில்
1952–1955
கோலாலம்பூர் பங்சார்
நகராட்சி ஆணையர்
பதவியில்
1955–1958
தனிநபர் தகவல்
பிறப்பு தேவகி அய்யாதுரை கிருஷ்ணன்
(Devaki Ayathurai Krishnan)

(1923-03-11)11 மார்ச்சு 1923

[1]
போர்டிக்சன், நெகிரி செம்பிலான், மலேசியா

இறப்பு 20 சனவரி 2024(2024-01-20) (அகவை 100)
கோலாலம்பூர்
தேசியம் மலேசியர்
அரசியல் கட்சி மலேசிய இந்திய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்)
பி. கிருஷ்ணன் (இற. 1998)
பிள்ளைகள் 3

தேவகி கிருஷ்ணன் (Devaki Ayathurai Krishnan; மலாய்: Devaki Krishnan; சீனம்: 德瓦克克里希南, 11 மார்ச் 1923 – 20 சனவரி 2024) என்பவர் 1952-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட முதல் மலேசிய இந்தியர் அரசியல்வாதியும்; மலேசியாவில் அரசுப் பொதுச் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.

மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பிரித்தானிய மலாயா ஆட்சியில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையும் இவரைச் சேர்கிறது. இவர் தற்போது மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தேவகி கிருஷ்ணன் இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவர். நெகிரி செம்பிலான் போர்டிக்சன் நகரில் பிறந்தவர்; குடும்பத்தின் ஆறு குழந்தைகளில் மூத்தவர். இவரின் தந்தையார் மலாயா அஞ்சல் மற்றும் தொலைபேசி தொடர்பு கட்டுப்பாட்டு அதிகாரியாகச் சேவை செய்தவர்; தாயார் கல்லூரியில் பயிற்சி பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஆகும்.

கோலாலம்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் கல்வி பயின்றார். பட்டம் பெற்றதும் பள்ளி ஆசிரியரானார். 1949-இல், அவர் சிலாங்கூர் இந்திய சங்கத்தின் தீவிர உறுப்பினரானார். அந்தச் சங்கத்தின் பொழுதுபோக்கு மற்றும் சமூகக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். 1950-ஆம் ஆண்டில் அவர் பெண்கள் மன்றத்தின் பொது கூட்டமைப்பிலும் தீவிரமாக ஈடுபட்டார். அங்கு அவர் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதில் தம் நேரத்தை செலவிட்டார்.

அரசியல் வாழ்க்கை

மலாயா விடுதலைக் கட்சி

1951 திசம்பரில், கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட தேவகி தேர்வு செய்யப்பட்டார். மலாயா விடுதலை கட்சி உறுப்பினராக, மறைந்த டத்தோ ஓன் சாபார் அவர்களால் அணுகப்பட்டார். 1952-ஆம் ஆண்டு நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் பொதுச் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றார். 1955-இல், கோலாலம்பூர் பங்சார் நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றார்.

மலேசிய இந்திய காங்கிரசு

பங்சார் தேர்தலுக்குப் பிறகு, தேவகி கிருஷ்ணன் மலேசிய இந்திய காங்கிரசு (ம.இ.கா) உறுப்பினரானார். அப்போது ம.இ.கா ஒரு சமூக, நலன்புரிச் சங்கமாய் இருந்தது. 1959-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலப் பொதுத் தேர்தலில் அவர் கோலாலம்பூர், செந்தூல் தொகுதியில் பாரிசான் நேசனல் கூட்டணியின் கீழ் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

1975-ஆம் ஆண்டில், தேவகி கிருஷ்ணனின் முயற்சியால் ம.இ.கா.வின் மகளிர் பிரிவு உருவாக்கப்பட்டது. தேவகி கிருஷ்ணன் நாடு முழுவதும் பயனங்களை மேற்கொண்டு பெண்களைச் சேர்த்தார்.

சிலாங்கூர் ம.இ.கா மாநிலக் கிளை

1975-ஆம் ஆண்டில், மலேசிய இந்திய காங்கிரசு மகளிர் பிரிவின் செயலாளராகவும், 1984-ஆம் ஆண்டில் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.

1980-ஆம் ஆண்டுகளில் இவர் ம.இ.கா சிலாங்கூர் மாநிலக் கிளையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் மலேசிய இந்திய காங்கிரசு சையத் புத்ரா கிளையின் தலைவராகப் பணியாற்றினார். 2021 ஆகத்து மாதத்தில், மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் நீண்டகால உறுப்பினர் என பெருமை செய்யப்பட்டார்.[2]

குடும்ப வாழ்க்கை

இவரின் கணவர் பி. கிருஷ்ணன் ஒரு தொழிலதிபர். அரசியலில் ஈடுபடாத அவர் 1998-இல் மரணம் அடைந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர். மூத்த பேரன் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவர் மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் முன்னாள் பொருளாளர்; தற்போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

தேவகி கிருஷ்ணன் தனது 100-ஆவது அகவையில் 2023 சனவரி 20 அன்று காலமானார்.[3]

விருதுகளும் அங்கீகாரமும்

மேற்கோள்கள்

  1. Morais, John Victor, தொகுப்பாசிரியர் (1967). The Who's who in Malaysia. Solai Press. பக். 143. 
  2. The women who built Malaysia
  3. Remembering Tan Sri Devaki Krishnan: The Grand Dame of Malaysian Indian Politics, New Strait Times, சனவரி 21, 2024
  4. "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat" இம் மூலத்தில் இருந்து 19 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190719195551/http://www.istiadat.gov.my/index.php/component/semakanlantikanskp. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தேவகி_கிருஷ்ணன்&oldid=25095" இருந்து மீள்விக்கப்பட்டது