ரத்னாவளி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரத்னாவளி
இயக்கம்பிரஃபுல்லா கோசு
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
சரசுவதி டாக்கீசு
கதைமூலக்கதை: அர்சர்
திரைக்கதைபம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
பி. எஸ். ரத்னாபாய்<
பி. எஸ். சரஸ்வதிபாய்
கே. எஸ். அங்கமுத்து
பாடலாசிரியர்பாபநாசம் சிவன்
வெளியீடு1935
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரத்னாவளி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரஃபுல்லா கோசு இயக்கிய இத்திரைப்படத்தை[1] ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் தயாரித்திருந்தார். கல்கத்தாவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[2] இதன் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார்.[3] இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பி. எஸ். ரத்னாபாய், பி. எஸ். சரஸ்வதிபாய் சகோதரிகள் ஆகியோர் நடித்திருந்தனர்.

பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றிய ரத்னாவளி நாடகத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[4]

திரைக்கதை

ஹர்ஷவர்தனர் எழுதிய ரத்னாவளி என்ற காப்பியத்தை அடிப்படையாக வைத்து பம்மல் சம்பந்த முதலியார் இதன் திரைக்கதையை எழுதினார். கௌசாம்பி நாட்டு மன்னனுக்கும் (எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி), இலங்கையின் இளவரசி ரத்னாவளிக்கும் (பி. எஸ். ரத்னாபாய்) ஏற்பட்ட காதல் பற்றியது இத்திரைப்படத்தின் கதை.[5] ஒரே அரசனை ஒன்று விட்ட சகோதரிகளான இருவர் மணக்கிறார்கள்.[6]

நடிகர்கள்

பாடல்கள்

பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றிய முதலாவது திரைப்படம் இதுவாகும்.[3]

வரவேற்பு

இப்படம் வெற்றி அடையவில்லை, ஆனாலும் நகைச்சுவைக் காட்சிகளுக்காக வரவேற்பைப் பெற்றது. ‘தென்னாட்டுச் சார்லி சாப்ளின்’ எனப் போற்றப்பட்ட சி. எஸ். சாமண்ணா, சுப்பிரமணிய முதலியார், கே. எஸ். அங்கமுத்து, பபூன் சண்முகம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர்.[6] நாடகங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருந்த பி.எஸ். ரத்னாபாய், பி.எஸ். சரஸ்வதிபாய் ஆகிய இரு சகோதரிகள் கதாநாயகிகளாக நடித்தனர். நெல்லை மாவட்டம், பாளையம்கோட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பாடல்கள் கிராமபோன் இசைதட்டுகளில் அக்காலத்தில் வெளியாகியுள்ளன.[6]

மேற்கோள்கள்

  1. "Ratnavali on Moviebuff.com". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. ராண்டார் கை (சனவரி 24, 2002). "The Hindu : Melody and more in every frame". தி இந்து. Archived from the original on 2017-05-28. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  3. 3.0 3.1 "இது நிஜமா!". குண்டூசி: பக். 57. சூலை 1951. 
  4. "Encyclopedia of Indian Cinema". பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  5. 5.0 5.1 Kadalukku uvamai kadale(vMv)--RATHNAAVALI 1935. 2016-08-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-07 – via YouTube.
  6. 6.0 6.1 6.2 விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள், அரவிந்த் சுவாமிநாதன்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரத்னாவளி_(திரைப்படம்)&oldid=36986" இருந்து மீள்விக்கப்பட்டது