ரகமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரகமி
ரகமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரகமி
பிறப்புபெயர் ங்கசாமி
இறப்பு 2000, செப்டம்பர்
அறியப்படுவது எழுத்தாளர்
துணைவர் சீதாலட்சுமி

ரகமி இருபதாம் நூற்றாண்டின் பிரபல தமிழ் எழுத்தாளர்.[1]இவரது இயற்பெயர் ரங்கசாமி. இவர் தமது எழுபதாவது வயதில் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி.[2]

வாஞ்சிநாதனையும், செண்பகராமனையும் கதைவடிவில் அறிமுகப்படுத்தியவர். பாரதியார் பணியாற்றிய சுதேசமித்திரன் நாளிதழில் இவரும் பணியாற்றியுள்ளார். [3]

ரகமி அவர்களின் எழுத்து என்பது ஆராவாரமில்லாத எளிய நடை, அடுக்கு, அலங்காரச் சொற்கள் இல்லாதது. ஆனால் ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தினத்தந்தி படிப்பவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையில் ஆர்வத்தை உண்டாக்கும் ஆதாரங்களை மட்டுமே கொண்ட ஆவணம்.

   டி. வி. ர(ங்)க(சா)மி 1931 இல் பிறந்தவர் வந்தவாசி அருகே கீழ் கோவளைவேடு கிராமம், இவரது பூர்விகம் மற்றும் பிறந்த ஊர்.. கீழ கோவளைவேடு கிராமத்து அக்ரஹார வாசிகள் தினமும் காஞ்சி வரதருக்கு துளசி சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்துவந்தவர்கள். இந்த கிராமத்துக்கு பழமையான பெயர் "வரதராஜபுரம்". இங்குள்ள அக்ரஹார வீதி ஒன்றுக்குப் பெயர் "தேப்பெருமாள் வீதி". இவையெல்லாம் காஞ்சி திவ்ய தேசத்துடன் இந்த கிராமத்துக்கு உள்ள தொடர்பை விளக்கும். ஸ்ரீ அம்புஜவல்லி ஸமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஸன்னிதி இந்த கிராமத்தின் மற்றொரு சிறப்பு.
   ரகமி மாணவர் பருவத்தில் "இந்திய மாணவன்" என்ற பத்திரிகையை நடத்தியவர். தந்தை வக்கீல் வெங்கட வரதய்யங்காரிடம் உதவியாளராக இருந்து பின் பத்திரிகைத்துறைக்கு வந்தவர். மும்பை நிறுவனம் ஒன்றில் அஞ்சல் வழி இதழியல் படிப்பு, பின் பாரதி பணியாற்றிய சுதேச மித்ரனில் 1978 வரை பணியாற்றியவர்.
   ரகமியின் எண்ணற்ற துணுக்குகள் பத்திரிகைகளிலும் , 40க்கும் மேற்பட்ட நாடகங்கள் சென்னை வானொலியில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பானது.  1884 முதல் வெளியான அனைத்து சுதேச மித்ரன் இதழ்களையும் முழுதும் தேச விடுதலைப் போராட்ட வரலாற்றுக்காக ஆராய்ச்சி நோக்கில் சேகரித்தவர்.   
   ஏழ்மைநிலையிலும் இவர் சேகரித்த அறிய தகவல்கள் மற்றும் படங்கள் இவற்றை நெகட்டிவ் ஆக்கி கேட்டவர்களுக்கெல்லாம் தந்தவர். ரகமி ஒரு ஆவணக் கூடமாகவே திகழ்ந்தார். இவரது கணிதமேதை ராமானுஜம் மற்றும் டாக்குமெண்ட்ரிகள் ஜப்பான், அமெரிக்கா, லண்டன் நாடுகளில் இவருக்கு பெருமை தேடித்தந்தது.

பதிப்பேறிய நூல்கள்

  • தீரர் சத்தியமூர்த்தி
  • வீரவாஞ்சி
  • இராமானுன்
  • மாடசாமி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரகமி&oldid=5671" இருந்து மீள்விக்கப்பட்டது