யுரேனி நொசிக்கா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யுரேனி நொசிக்கா
யுரேனி நொசிக்கா
இயற்பெயர்/
அறியும் பெயர்
யுரேனி நொசிக்கா
பிறந்ததிகதி 29 சனவரி 1983 (1983-01-29) (அகவை 41)
பணி நடிகை, வடிவழகி
தேசியம் இலங்கையர்
கல்வி மெதோடிஸ் கல்லூரி கொழும்பு
செயற்பட்ட ஆண்டுகள் 2007–தற்சமயம் வரை
செயற்பட்ட ஆண்டுகள் 2007–தற்சமயம் வரை
இணையதளம் www.yureninoshika.lk

யுரேனி நொசிக்கா இலங்கையின் தொலைக்காட்சி நாடக நடிகையும், மிஸ் இலங்கை அழகி வாகையாளரும் ஆவார். இவர் இலங்கை அழகியாக மகுடம் சூடியமை தொலைக்காட்சி துறையில் நுழைய வழிவகுத்தது. திரைப்பட மற்றும் விளம்பர துறையிலும் தம் பணியைத் தொடர்கின்றார்.

ஆரம்ப வாழ்க்கை

யுரெனி நொசிக்கா இலங்கையில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஒரே புதல்வியாவார். கொழும்பு மெதோடிஸ் கல்லூரியில் கல்வி கற்றார். பின் சட்டப்படிப்பை மேற்கொண்டார். தற்சமயம் நடிகையாக பணி புரிகின்றார்.

தொழில்

2006 ஆம் ஆண்டு தெரன தொலைக்காட்சி அலைவரிசையில் மாடல்ஸ் ஒப் நியு ஜெனரேசன் அணிவகுப்பில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். பின் உலக சுற்றுலா ராணி அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். நொசிகா தன் நடிப்புத்திறமையாலும், இசைத்திறமையினாலும் இத்துறைகளில் பணி புரிகின்றார்.

நொசிகா கோகோ கோலா மென்பானம், நெஸ்லே மற்றும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். கசம் சே என்ற இந்தி தொலைக்காட்சி தொடரை சிங்களத்தில் கின்துரங்கன என்ற பெயரில் இந்தியாவின் பாலாஜி டெலி பிலிம்ஸ் மற்றும் இலங்கை மகராஜா அமைப்பு இணைந்து தயாரித்தன. இத் தொலைக்காட்சி தொடரில் நொசிகா நடித்துள்ளார்.

நொசிகா கின்துரங்கன, சன்டசக்கி, அரொர சிகின சிந்திரல்லா, அயல் மற்றும் பின்கலடன் நநுவ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.[1]

2009 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் நுழைந்தார். நினோ லைவ் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு வர்த்தக ரீதியாக  வெற்றி பெற்றது.[2]

நொசிகா 2015 ஆம் ஆண்டு இசைத்துறையிலும் தடம் பதித்தார். தற்சமயம் கும்பியோ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பரவலாக அறியப்படுகின்றார்.

மற்ற நடவடிக்கைகள்

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இணையவழி மிஸ் இலங்கை அழகி போட்டியில் நடுவராக தெரிவு செய்யப்பட்டார்.[3]

பங்குபற்றிய போட்டிகள்

ஆண்டு தலைப்பு விளைவு
2008 சிரச நடனம் நட்சத்திரங்கள் பங்கேற்பாளர்
2017 ஹிரு மெகா ஸ்டார் கிராண்ட் வெற்றியாளர்

தொலைக்காட்சி தோற்றங்கள்

ஆண்டு தலைப்பு வகை
2009 கிந்துரங்கன தொலைக்காட்சி நாடகம்
2009 அயல் தொலைக்காட்சி நாடகம்
2009 பிங்கலா டேனவா தொலைக்காட்சி நாடகம்
2010 சீஹினா சிண்ட்ரெல்லா தொலைக்காட்சி நாடகம்
2012 பியாவி தொலைக்காட்சி நாடகம் [4]
2014 சிஎஸ்என் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை ஒலிபரப்பு லைவ் விளையாட்டு போட்டி
2017 கும்பியோ தொலைக்காட்சி நாடகம்

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம்
2015 பிராவிகயா பொருள் பாடல் தோற்றம்
2017 நினி லைவ் நுநு
2018 கஜமன் குரல். கஜமனின் தாயாக
அறிவிக்கப்படும் நைட் ரைடர் முன்னணி பாத்திரம்
அறிவிக்கப்படும் ஆடாலா லுனவ டாம்மா கொடியா [5]

இசை சரிதம்

முன்னணி கலைஞராக

தலைப்பு ஆண்டு
சாரி போட் 2015
சூயிங் கம் வேஜ் கொல்லோ 2017

விருதுகள்

ஆண்டு விருது வகை
2015 ராய்கா டெலி'ஸ் மிகவும் பிரபலமான நடிகை
2015 சுமதி விருதுகள் மிகவும் பிரபலமான நடிகை
2015 தெரணா இசை வீடியோ விருதுகள் சிறந்த டான்ஸ் வீடியோ
2016 சுமதி விருதுகள் மிகவும் பிரபலமான நடிகை
2018 தெரணா சன்சிலை திரைப்பட விருதுகள் மிகவும் பிரபலமான நடிகை
2018 தெரணா சன்சிலை திரைப்பட விருதுகள் ஆண்டின் சமூக மீடியா ஆளுமை
2018 சரஸ்வதி திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகை

குறிப்புகள்

Yureni Noshika உயரம், எடை, உயரம் மற்றும் இன்னும்

"https://tamilar.wiki/index.php?title=யுரேனி_நொசிக்கா&oldid=28504" இருந்து மீள்விக்கப்பட்டது