யுரேகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

யுரேகா (Youreka) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.[1][2]

தொழில்

திரைப்பட பாடலாசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய யுரேகா, மதுரை சம்பவம் என்ற திரைப்படத்தின் வாயிலாக தயாரிப்பாளராக அறிமுகமானார், ஹரிகுமார், அனுயா பகவத் , கார்த்திகா ஆகியோர் நடித்த ஒரு அதிரடி திரைப்படம் இதுவாகும், இதன் வழியாக என்டிடிவி தமிழ் திரையுலகில் முதல் தயாரிப்பு முயற்சியை மேற்கொண்டது.[3] இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, தி இந்து பத்திரிகையின் ஒரு விமர்சகர் "யுரேகா மட்டும் திரைக்கதையில் கவனம் செலுத்தியும், இறுதிகட்டத்தில் மேலும் கூடுதலாக பணியாற்றியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" ஆனால் "அதற்கு பதிலாக அவர் நாயகனை அதிரடி காட்சிகளில் நடிக்கவைப்பதில் திருப்தி அடைந்ததாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டார்.[4] குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியுடன் இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றிய கதை, சிவப்பு எனக்கு பிடிக்கம் (2017) அப்படத்தில் பணியாற்ற யூரேகா அடுத்ததாக சென்றார். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததுடன், தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றார் யுரேகா. நடிகை சாண்ட்ரா ஆமி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 2014 நடுப்பகுதியில் படத்தின் பணிகளை முடித்தார். இருப்பினும், படம் தயாரிப்பு சிக்கல்களில் சிக்கி, பல ஆண்டுகளுக்குப் பிறகு 2017 சனவரியில் வெளியிடப்பட்டது.[5][6] இவரது அண்மைய வெளியீடு தொப்பி (2015) ஆகும். இப்படத்தில் புதுமுகங்கள் முரளி ராம், ரக்சா ராஜ் ஆகியோர் நடித்தனர். தயாரிப்பாளர் தனக்குத் தெரியாமல்படத்தின் இரண்டாம் பாதியில் காட்சிகளைக் கணிசமாகக் குறைத்ததாக இயக்குனர் புகார் கூறியது சர்ச்சையுடன் படம் வெளியீடானது.[7][8]

2017 ஏப்ரலில், ஜெயவந்த் மற்றும் ஈரா அகர்வால் ஆகியோர் நடிப்பில் காட்டு பையன் சார் இந்த காளி என்ற படத்தில் பணியாற்றத் தொடங்கினார்.[9]

பாடலாசிரியராக

திரைப்பட இயக்குநராக

  • குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் குறிப்புகள்
2009 மதுரை சம்பவம்
2015 தொப்பி
2017 சிவப்பு எனக்கு பிடிக்கும் நடிகராகவும்
2018 காட்டு பையன் சார் இந்த காளி

குறிப்புகள்

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  3. http://www.indiaglitz.com/thoothukudi-pair-in-ndtv-film-tamil-news-43375.html
  4. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Climax-is-a-letdown-Madurai-Sambavam/article15939744.ece
  5. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/audio-beat-sivappu-enakku-pidikkum-red-alert/article5826115.ece
  6. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/170117/a-film-on-sex-education.html
  7. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/thoppi/movie-review/46487253.cms
  8. http://www.thehindu.com/features/cinema/etcetera/article6868899.ece
  9. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/040417/beauty-queen-set-to-wow-celluloid.html
"https://tamilar.wiki/index.php?title=யுரேகா&oldid=21191" இருந்து மீள்விக்கப்பட்டது