யாரொசுலாவ் வாச்செக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யாரொசுலாவ் வாச்செக்
இயற்பெயர்/
அறியும் பெயர்
யாரொசுலாவ் வாச்செக்
பிறந்ததிகதி 26 சூன் 1943
Litostrov
இறப்பு 23 சனவரி 2017
(அகவை 73)
பணி Mongolist,
பல்கலைக்கழகப் பேராசிரியர்
குறிப்பிடத்தக்க விருதுகள் Medal of Friendship

யாரொசுலாவ் வாச்செக் (Jaroslav Vacek, 26 சூன் 1943 - 23 சனவரி 2017) செக் நாட்டுத் தமிழறிஞரும், இந்தியவியலாளரும், பேராசிரியரும் ஆவார். தமிழ் மொழிக்கான பங்களிப்புகளுக்காக இவருக்கு 2012 ஆம் ஆண்டில் குறள் பீடம் விருது வழங்கப்பட்டது.

யாரொசுலாவ் வாசெக் தெற்கு மற்றும் மத்திய ஆசிய கல்விக்கழகத்தின் பணிப்பாளராகவும், பிராகா சார்லசுப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். சார்லசுப் பல்கலைக்கழகத்தில் 1976 இல் மொங்கோலிய மொழி ஆய்வு குறித்த புதிய கற்கை நெறியைத் தொடங்கினார். செக் நாட்டு கிழக்கத்தியக் கழகம், பிராகா மொழியியல் குழுமம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் பகவத் கீதையை சமக்கிருதத்தில் இருந்து செக் மொழிக்கு மொழிபெயர்த்தார். இந்திய மொழியியல், திராவிட - அல்த்தாய் தொடர்புகள் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழ் மொழியில் சரளமாகப் பேசக் கூடியவர்[1][2]

இவர் திருவனந்தபுரத்தில் இருந்து வெளியாகும் திராவிட மொழியியலுக்கான பன்னாட்டு ஆய்விதழ், புதுச்சேரியில் இருந்து வெளியாகும் திராவிடக் கற்கைகளுக்கான ஆய்விதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பேராசிரியர் வாச்செக் 1965 ஆம் ஆண்டில் சமற்கிருதத்திலும், தமிழிலும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார். 1976 இல் பிராகா சார்லசு பல்கலைக்கழகத்தில் மொங்கோலிய மொழிக் கற்கை நெறியை ஆரம்பித்தார். உலான் பத்தூர் நகரில் இவர் ஏறத்தாழ ஓராண்டு காலம் தங்கி மொங்கோலிய மொழி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். 1990 இல் சார்லசு பல்கைக்கழகத்தில் சமற்கிருதம், தமிழ் , வங்காள மொழிகளில் கற்கை நெறிகளை மீள ஆரம்பித்தார்.[3]

வாச்செக் தமது ஆய்வுப் பணிக்காக இந்தியாவிற்கு பல முறை பயணம் மேற்கொண்டு வந்தார். 2016 சனவரியில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு சமற்கிருந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காக வந்திருந்த போது தலையில் ஏற்பட்ட காயங்களால் மயக்கமுற்ற நிலையில் ஒரு மாதகாலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 2016 பெப்ரவரியில் பிராகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டார்.[4]

பேராசிரியர் வாச்செக் 2017 சனவரி 23 ஆம் நாள் காலையில் பிராகா நகரில் காலமானார்.

விருதுகள்

  • 1997 – சார்லசு பல்கைக்கழக தங்க விருது
  • 2006 – சார்லசு பல்கலைக்கழக நினைவு விருது
  • 2012 - குறள் பீடம் விருது - தமிழ் மொழிக்கான பங்களிப்புகளுக்காக இந்திய குடியரசுத் தலைவர் விருது
  • 2012 - அருந்தமிழ் விருது (பிரான்சு வொரயால் தமிழ்க் கலாச்சார மன்றம்)[3]

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • வாஸந்தி எழுதிய ஆகாச வீடுகள், (பிராகா 2000, 199 பக்.; ISBN 80-7254-069-6)
  • பகவத்கீதா (Praha 2000, 2ம் பதிப்பு, 243 பக்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யாரொசுலாவ்_வாச்செக்&oldid=26167" இருந்து மீள்விக்கப்பட்டது