யமுனா (நடிகை)
யமுனா | |
---|---|
பிறப்பு | பிரேமா[1] பெங்களூரு, கருநாடகம், இந்தியா |
பணி | நடிகை |
பிள்ளைகள் | 2[2] |
யமுனா (Yamuna) மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ்ப் படங்களிலும் தெலுங்கு படங்களில் முதன்மையாகத் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார்.[3] மாமகரு, மௌன போராட்டம், எற்ற மந்தாரம் போன்ற படங்களில் நடித்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
யமுனா கருநாடகாவின் பெங்களூரில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிரேமாவாகப் பிறந்தார். இவர்களது பூர்வீகம் ஆந்திராவின் சித்தூர் ஆகும். ஆனால் இவரது குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது. இயக்குநர் பாலச்சந்தரின் திரைப்பட அறிமுகத்திற்குப் பிறகுத் தனது பெயரை யமுனா என மாற்றிக்கொண்டார்.[1]
திரைத்துறையில்
யமுனா சிவ ராஜ்குமாருடன் இணைந்து கன்னட திரைப்படமான மொடடா மரேயல்லி (1989) மூலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[4] இவர் 1989-இல் விருது பெற்ற தெலுங்குத் திரைப்படமான மௌன போராட்டம்[5][6][7] மூலம் புகழ் பெற்றார். இத்திரைப்படம் சபீதா பதேயின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது மிகப்பெரிய ஊடக வரவேற்பினைப் பெற்றது. ஒரு அரசாங்க அதிகாரியால் காட்டிக் கொடுக்கப்பட்ட துர்காவாக யமுனா நடித்தார். மேலும் தனது முறையற்ற குழந்தைக்குச் சரியான அடையாளத்தை வழங்கத் திருமண அங்கீகாரம் கோரி தனது திருமண உரிமைகளுக்காக இத்திரைப்படத்தில் போராடும் தாயாக நடித்திருந்தார்.[8]
பின்னர் யமுனா மற்றொரு வெற்றிகரமான திரைப்படமான மாமகருவில் வினோத் குமாருக்கு இணையாகச் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.[9] 1990ஆம் ஆண்டு வெளியான புட்டிண்டி பட்டுச் சேரா திரைப்படத்தில், மாமியார்களால் துன்புறுத்தப்படும் அதிர்ஷ்டமற்ற மருமகளாக இவர் நடித்தார். 1990ஆம் ஆண்டு <i id="mwOw">எர்ரமந்தாரம்</i> திரைப்படத்தில் முன்னணி நடிகையாகவும் நடித்தார்.[10] சிவராஜ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருடன் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.[11]
திருமணத்திற்குப் பிறகு, இவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். சிறிது இடைவெளிக்குப் பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் ஈ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்வேஷிதா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
திரைப்படவியல்
தெலுங்கு
- மௌன போராட்டம் (1989) துர்காவாக
- புட்டிண்டி பட்டு சேரா (1990)
- இன்ஸ்பெக்டர் ருத்ரா (1990)
- கட்டனா (1990)
- ஆதாதி (1990)
- உத்யமம் (1990) சாந்தாவாக
- யெர்ரா மந்தாரம் (1991) அருந்ததியாக
- கௌரம்மா (1991)
- மாமகரு (1991) லட்சுமியாக
- நாகம்மா (1991)
- அம்மா கடுப்பு சல்லங்கா (1991)
- கல்லூரி புல்லோடு (1992) சோபாவாக
- சூரிகாடு (1992)
- பங்காரு மாமா (1992)
- அத்ருஷ்டம் (1992)
- பிரேமா விஜேதா (1992)
- ஆதர்சம் (1993) வாணியாக
- ராஜதானி (1993)
- பிரம்மச்சாரி மொகுடு (1994) ஜெயலட்சுமியாக
- அண்டாரு அந்தரே (1994)
- மந்திரால மரிசெட்டு (1994)
- நன்னகாரு (1994)
- கிருஷ்ணவேணியாக பங்காரு குடும்பம் (1994).
- கோவிந்தா கோவிந்தா (1994) மகாலட்சுமி தேவியாக
- அன்புள்ள சகோதரர் (1995)
- பிரேமகு பாடி சூத்ராலு (1995)
- பார்வதியாக பாச்சி (2000).
- எதிரிலேனி மனிஷி (2001) பவானியாக
- சிறீ மஞ்சுநாதா (2001) பிரியா கங்காவாக
- ஓ சின்னதானா (2002)
- மனசு பிலிச்சிண்டி (2009)
- பகீரதுடு (2010)
- கெரடம் (2011)
- டாக்சிவாலா (2018) சிசிராவின் தாயாக
மலையாளம்
- தோரணம் (1987)
கன்னடம்
- மோடடா மரேயல்லி (1991)
- மாவனிகே தக்க அலியா (1992)
- ஹெந்ததிரே ஹுஷாரு (1992)
- கேரளாடா சர்பா (1994)
- சின்னா (1994)
- பிரேமா கீதே (1997)
- ஹலோ யமா (1998)
- ஸ்ரீ மஞ்சுநாதா (2001) கங்கை நதியாக
- ஹாகே சம்மனே (2008)
- நாரியா சீரே கடா (2010)
- கண்டீரவா (2011)
- ஷம்போ சங்கரா (2010)
- தில் ரங்கீலா (2014)
- ராஜஹம்சா (2017)
தமிழ்
- மனதில் உறுதி வேண்டும் (1987) - தமிழில் அறிமுகம்
- மௌன போராட்டம் (1989)
- டில்லி பாபு (1989)
- ஆதி விரதம் (1991)
- பொறந்த வீட்டு பாட்டு புடவை (1991)
- சிவசங்கரி (1992)
- ஐ லவ் இந்தியா (1992)
- யுகா (2006)
- யுவன் (2011)
தொலைக்காட்சி
- திருவிளையாடல் (சன் தொலைக்காட்சி)
- அம்மன் (சன் தொலைக்காட்சி)
- விதி ( ஈ தொலைக்காட்சி) சரோஜா / ரோஸியாக
- ஸ்நிக்தா தேவியாக அன்வேஷிதா (ஈ தொலைக்காட்சி).
- ரக்த சம்பந்தம் (ஜெமினி தொலைக்காட்சி)
- அல்லரே அலரி (ஈ தொலைக்காட்சி பிளஸ்)
- ரோஸியாக சீதாமா வகிடிலோ சிரிமல்லே செட்டு (விதி-2).
- லட்சுமி (உதயா தொலைக்காட்சி)
- லட்சுமி ஜான்சியா மகளு (உதயா தொலைக்காட்சி)
- தேவி (ஜீ கன்னடா)
- தாமினி (ஜெமினி தொலைக்காட்சி)
- அம்ருதம்
- மௌன போராட்டம் ( ஈ தொலைக்காட்சி)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Yamuna Biography". cochintalkies. http://www.cochintalkies.com/celebrity/yamuna-biography.html.
- ↑ "విశాఖ నాకు సొంతిల్లులాంటిది: నటి" (in en). 10 August 2017. https://www.sakshi.com/news/movies/senior-heroien-yamuna-chit-chat-with-sakshi-in-visakhapatnam-498611?pfrom=inside-latest-news&district=vikarabad.
- ↑ Bollineni, Haribabu (21 August 2016). "Why Senior Actress Tried to Commit Suicide?". Chitramala. http://www.chitramala.in/why-senior-actress-tried-to-commit-suicide-234687.html.
- ↑ Shyam, Prasad S (27 September 2016). "Yamuna back on the big screen". https://bangaloremirror.indiatimes.com/entertainment/south-masala/Yamuna-back-on-the-big-screen/articleshow/54549532.cms.
- ↑ "1989 Nandi Awards". http://awardsandwinners.com/category/nandi-awards/1989/.
- ↑ "1989 Nandi Awards". http://awardsandwinners.com/category/nandi-awards/1989/.
- ↑ "List of winners of the Nandi Award for Best Feature Film". http://telugufilmz.org/wiki/List_of_winners_of_the_Nandi_Award_for_Best_Feature_Film.
- ↑ "Mouna Poratam Music by S Janaki". http://www.sjanaki.net/mouna-poratam-music-by-s-janaki.
- ↑ "1991 Nandi awards". http://awardsandwinners.com/category/nandi-awards/1991/.
- ↑ "1990 Nandi Awards". http://awardsandwinners.com/category/nandi-awards/1990/.
- ↑ "ఆ రూమర్ వచ్చాక... సూసైడ్ చేసుకోవాలని నిర్ణయించుకున్నా.. నటి యమున". http://telugu.webdunia.com/article/telugu-cinema-news/actress-yamuna-talks-about-her-prostitution-case-116082000030_1.html.