மோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோ
இயக்கம்புவன் ஆர். நுல்லான்
கதைபுவன் ஆர். நுல்லான்
இசைசந்தோஷ் தயாநிதி
நடிப்புசுரேஷ் ரவி
ஐஸ்வர்யா ராஜேஷ்
ரமேஷ் திலக்
தர்புகா சிவா
ஒளிப்பதிவுகே. விஷ்ணு ஸ்ரீ
படத்தொகுப்புகோபிநாத்
வெளியீடுடிசம்பர் 30, 2016
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மோ (Mo) 2016இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். புவன் ஆர். நுல்லான் இதனை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் முனீஷ்காந்த் ராமதாஸ், பூஜா தேவரையா, செல்வா, மீம் கோபி ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தொகுப்பு கோபிநாத், இசை சந்தோஷ் தயாநிதி. ஒரு புதிய தொழில்நுட்ப குழுவைக் கொண்ட இப்படம், 2015 இல் தயாரிக்கத் தொடங்கி 2016 திசம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது.

கதை

வெற்றி (செல்வா), ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர், புதிய உல்லாசப்போக்கிடம் நிறுவ பாண்டிச்சேரி அருகே ஒரு பழைய பள்ளியின் இடத்தை வாங்க நினைக்கிறான். மற்றொரு தொழிலதிபர் செந்தில் நாதன் (மீம் கோபி) அந்த இடத்தை வாங்குவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. செந்திலின் ஜாதகத்தில் பேய் குடியிருக்கும் சொத்தை சொந்தமாக்கிக் கொள்ளக்கூடாது என்று இருக்கிறது, மேலும் அவர் பேய்களுக்கு பயப்படுகிறார். தேவ் (சுரேஷ் ரவி), சதீஷ் (ரமேஷ் திலக்), மற்றும் குமார் (தர்புகா சிவா) ஆகிய மூவரும் குழந்தை பருவத்திலிருந்தே பணத்தை ஏமாற்றுவதில் ஈடுபட்டுள்ள சிறு வயது நண்பர்கள். அவர்கள் பேய் பயத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற ஒரு புதிய யோசனை கண்டறிகிறார்கள்.

ஒப்பனைக் கலைஞர் ஜோசப் செல்லப்பா (முனீஷ்காந்த் ராமதாஸ்), மற்றும் சினிமாவில் நடிக்க கனவு காணும் இளைய சினிமா கலைஞர் பிரியா (ஐஸ்வர்யா ராஜேஷ்), ஆகிய இருவரும் அந்த மூவருடன் இணைகிறார்கள். ஜோசப்பின் ஒப்பனையில் பிரியா பேய் வேடம் போடுகிறார். ஒரு நாள் வெற்றியை ஏமாற்ற இந்த ஐவரும் போடும் திட்டம் தோல்வியில் முடிவடைகிறது. செந்தில் சொத்துக்களை வாங்காமல் இருப்பதற்காக இவர்களிடமே பேய் நாடகத்தை பாண்டிச்சேரி பள்ளியில் நடத்த அவர்களிடம் கேட்டுக் கொள்கிறார். இவர்களும் இதை ஏற்று அங்கு செல்கின்றனர். இவர்களின் அமானுஷ்ய நடவடிக்கையினால் செந்திலின் ஆட்கள் அப்பள்ளியில் பேய் இருப்பதாக நம்புகிறார்கள். பின்னர் நடைபெறும் பல திருப்பங்களுடன் வெற்றிவெற்றிகரமாக அந்த பள்ளியை வாங்குவதாக இந்தப் படம் முடிவடைகிறது, பிரியா ஒரு பேய் படத்தின் கதாநாயகியாக மாறுகிறார், மற்றும் ஜோசப் அவரது ஒப்பனையாளராக இருக்கிறார். இருப்பினும், தேவ், சதீஷ் மற்றும் குமார் மக்களை ஏமாற்றுவதை தொடர்கின்றனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

2015 இன் துவக்கத்தில் புவன் நுல்லான் இந்தப் படத்தைத் தொடங்கினார். முன்னணி பாத்திரங்களில் நடிப்பதற்கு சுரேஷ் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.[1][2] சென்னையிலுள்ள புறநகர்ப்பகுதிகளில் இத்திரைப்படம் பரவலாக படமாக்கப்பட்டு 2016 சனவரியில் முடிவடைந்தது.[3]

வெளியீடு

2016 திசம்பர் 30 அன்று " மோ" வெளியானது.[4]

ஒலித்தொகுப்பு

ஒரே ஒரு பாடல் கொண்ட இப்படத்தின் ஒலிப்பதிவை சந்தோஷ் தயாநிதி மேற்கொண்டார். இவர் , முன்னதாக சந்தானம் நடித்த "இனிமே இப்படித்தான்" என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மோ
ஒலித்தொகுப்பு
சந்தோஷ் தயாநிதி
வெளியீடு2016
ஒலிப்பதிவு2016
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்3:29
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சந்தோஷ் தயாநிதி
சந்தோஷ் தயாநிதி காலவரிசை
இனிமே இப்படித்தான்
(2015)
மோ
(2016)
எனக்கு வாய்த்த அடிமைகள்
(2017)
பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "எல்லாரும் கேடி"  வருண் பத்மநாபன் 3:29
மொத்த நீளம்:
3:29

மேற்கோள்கள்

  1. "Life after Kaaka Muttai". 5 October 2015 – via The Hindu.
  2. ""I am open to doing glamour roles," says Aishwarya Rajesh - Only Kollywood". 6 October 2015.
  3. "Aishwarya Rajesh's Mo Nearing Completion".
  4. "Mo Tamil Movie Censor Report and Release Details" (in en-US). Techiewheels இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220153512/http://techiewheels.com/mo-tamil-movie-casting-aishwarya-rajesh-gets-clean-u-certificate-and-releases-on-december-30/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மோ&oldid=36855" இருந்து மீள்விக்கப்பட்டது