மெய்ப்பட செய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மெய்ப்பட செய்
Meippada Sei
இயக்கம்வேலன்
தயாரிப்புபி.ஆர்.தமிழ் செல்வன்
இசைபரணி
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். வேல்
படத்தொகுப்புகே.ஜே. வெங்கட்ராமன்
கலையகம்எசு.ஆர். அர்சித் படங்கள்
வெளியீடுசனவரி 27, 2023 (2023-01-27)
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெய்ப்பட செய் (Meippada Sei) இந்தியாவில் வெளியிடப்பட்ட தமிழ்மொழி நாடகத் திரைப்படமாகும். வேலன் இயக்கத்தில் ஆதவ் பாலாஜி மற்றும் மதுனிகா ராசலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2023 ஆம் ஆண்டு . சனவரி மாதம் 27 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.[1][2]

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தின் படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டு நிறைவடைந்து. முதல்பார்வை சுவரொட்டியை இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்டார்.[3] திரைப்படம் முதலில் 2022 ஆம் ஆண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டது, ஆனால் தொற்றுநோயின் அப்போதைய தாக்கம் காரணமாக, திரைப்படம் 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. திரைப்படம் வெளியாவதற்கு முன், நடிகை மதுனிகா ராசலட்சுமி, படத்தின் திரைக்கதை தனக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் தன் பள்ளி நாட்களிலும் திரைப்படம் கூறும் சிக்கல்களை எதிர்கொண்டதை வெளிப்படுத்தினார்.[4][5][6]

வரவேற்பு

மெய்ப்பட பேசு படம் 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்கிறது, பின்னர் வேகத்தை எடுக்கிறது".[7] என்று தினத்தந்தியும் ஒளிப்பதிவாளர் காட்சிகளைத் தெளிவாகப் படமாக்கியிருக்கிறார் என்று மாலைமலரும் விமர்சனங்களை முன்வைத்தன. பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாகவும், சண்டைக் காட்சிகள் பயமுறுத்தவும் செய்கின்றன என்றும் குறிப்பிட்டு, மாலைமலர் படத்திற்கு 5-மதிப்பெண்ணுக்கு 3 நட்சத்திரங்கள் கொடுத்தது.[8] .

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மெய்ப்பட_செய்&oldid=32869" இருந்து மீள்விக்கப்பட்டது