மெய்ஞ்ஞான விளக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மெய்ஞ்ஞான விளக்கம் என்னும் நூல் இருந்தது என்பதை உரைநூல்களின் வாயிலாக அறிகிறோம். [1]

சாத்திரக் கருத்துக்களில் தனி ஒரு கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு விளக்கும் நூல்கள் பல தோன்றின. இவற்றிற்குத் தோன்றுவாயாக அமைந்த நூல் 'மனவாசகம் கடந்தார்' என்பவர் இயற்றிய 'உண்மை விளக்கம்' என்னும் நூல். அந்த வரிசையில் இந்த மெய்ஞ்ஞான விளக்கம் என்னும் நூலும் ஒன்று. மதுரைச் சிவபிரகாசரும், வெள்ளியம்பலவாணத் தம்பிரானும் இந்த நூலின் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர்.

இது வெண்பாவால் ஆன நூல். மு. அருணாசலம் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள் நூலில் பதினோரு பாடல்களை எடுத்துத் தந்துள்ளார்.

பாடல் - எடுத்துக்காட்டு [2]

நனவு தனிக் கருவி முப்பத்து ஐந்து ஆகும்
கனவு இருபத்து ஓர் ஐந்தால் காணில் - முனி சுழுத்தி
மூன்று ஆகும் காலை முழுத் துரியம் ஓர் இரண்டே
ஊன்றும் அதீதம் தரும் மான் ஒன்று. [3]

மாயை பகுதி தனை வந்திடும் எங்கும் காலம்
ஏயும் நியதி சிந்தையை இயற்றும் - மாயக்
கலை அகந்தை வித்தை புத்தி காண் மனத்தை ராக
மாலை புருடன் ஐந்தும் ஆம். [4]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 196. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. வெண்பாப் பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  3. சிவப்பிரகாசர் தம் சிவப்பிரகாசம் 60 ஆம் சூத்திர உரையில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் 5 அவத்தைகளை விளக்குவதற்கு மேற்கோளாக இந்தப் பாடலை எடுத்துக் காட்டியுள்ளார்
  4. கி. பி. 1700-ல் வாழ்ந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரான் சிவஞான சித்தியார் சூலுக்கு விளக்கமாகத் தாம் எழுதிய ஞானாவரண விளக்கவுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள பாடல்
"https://tamilar.wiki/index.php?title=மெய்ஞ்ஞான_விளக்கம்&oldid=17485" இருந்து மீள்விக்கப்பட்டது