மூக்கப்பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர்/
அறியும் பெயர்
மூ.மூக்கப்பிள்ளை
பிறந்தஇடம் புத்தனாம்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தேசியம் இந்தியர்
அறியப்படுவது வள்ளல்

மூ.மூக்கப்பிள்ளை புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரியை நிறுவியவர் ஆவார்.

தோற்றம்

மூக்கப்பிள்ளை திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புத்தனாம்பட்டியில் 1885 ஆம் ஆண்டு பிறந்தார். இவர்தம் தந்தையார் முத்தியபிள்ளை, அன்னையார் சின்னம்மா ஆவார்.

கல்விப்பணி

புத்தனாம்பட்டியில் 1941 ஆம் ஆண்டு ஷண்முகநாதன் துவக்கப்பள்ளியை நிருவகிக்கத் தொடங்கிய மூக்கப்பிள்ளை 1946 ஆம் ஆண்டு அதனை உயர் தொடக்கப்பள்ளியாக உயர்த்தினார். மேலும் அப்பள்ளியில் சாதி வேறுபாடின்றி எல்லாக் குழந்தைகளும் கல்வி பயில வகை செய்தார். கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களும் கல்வி அறிவு பெறுவதற்காக 1947 ஆம் ஆண்டு நேருவின் பெயரில் நடு நிலைப்பள்ளியைத் துவக்கினார். மலேயாவில் வசித்து வந்த தன்னுடைய மகன் முத்தையன் இறந்தவுடன் கிடைக்கப்பெற்ற ஆயுள் பாதுகாப்பீட்டு நிதி ரூபாய் 30000/- யை தன் குடும்பத்திற்கு செலவிடாமல் ஒரு கட்டிடத்தை எழுப்பி 1956 இல் நேரு ஆசிரியப்பயிற்சிப் பள்ளியை தொடங்கினார். அவருடையக் கல்விப்பணி காமராஜர் ஒராசிரியர் பள்ளிகளுக்கு பல ஆசிரியர்களை உருவாக்கிக் கொடுத்தது. மேலும் பள்ளிக்கல்வியுடன் நின்று விடாமல் 1967ஆம் ஆண்டு நேரு நினைவுக் கல்லூரியை துவக்கினார்.

தேசியப்பார்வை

மூக்கப்பிள்ளையின் வாழ்வு முழுவதும் நாட்டுப்பற்று நிறைந்திருந்தது. தான் நிறுவிய கல்வி நிறுவனத்திற்கு நேருவின் பெயரை வைத்தார். தன் மூத்த மகனுக்கு தேசத் தந்தையின் நினைவாக காந்தி என்றும், தன் மகள்களுக்கு முறையே சுயராஜ்யம், சுதந்திரம் என்றும், தன் பேத்திகளுக்கு குடியரசு, சோஷலிசம் என்றும் பெயரிட்டுத் தன்னுடைய தேசியப்பார்வையை வெளியிட்டார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மூக்கப்பிள்ளை&oldid=28403" இருந்து மீள்விக்கப்பட்டது