மு. முருகேசன்
Jump to navigation
Jump to search
மு. முருகேசன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மு. முருகேசன் |
---|---|
பிறந்ததிகதி | 1946 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
மு.முருகேசன் (கி.பி 1946) மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கே.எம்.முருகேசன் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1962 ஆம் ஆண்டு தொடங்கி இவர் மலேசியத் தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியத் தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்பு
- "30 நாட்களில்"
குழந்தைக் கதைகள்
- "மணியோசை"
- "இரண்டு முத்துக்கள்"
கட்டுரை
- "அனுபவங்கள்" (1999).
பரிசுகளும் விருதுகளும்
- தமிழ் இலக்கியக் கழகம் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கேடயம் வழங்கியுள்ளது.
- டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (1998).
- டத்தோ பத்மா விருது (1998).