முஸ்லிம் பாதுகாவலன்
Jump to navigation
Jump to search
முஸ்லிம் பாதுகாவலன் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1901ம் ஆண்டு மாதம் இருமுறை வெளிவந்த இதழ்.
ஆசிரியர்
- அப்துல் அசீஸ்.
1900ல் இவர் "அஸ்ஸாப்" என்ற அரபுத் தமிழ் இதழை ஏற்கனவே வெளியிட்டவர். சித்திலெவ்வை எழுதிய "அஸ்றாதுல் ஆலம்" என்ற நூலுக்கு வெளிவந்த கண்டனங்களுக்குப் பதிலளித்து "சத்திய ஞானார்த்தம்" என்ற நூலை அசீஸ் எழுதியுள்ளார். எனவே, இவர் சித்திலெவ்வை போன்று சமய சீர்த்திருத்தவாதியாக இருந்திருக்கிறார். இவர் 1907ல் "அல்-முஸ்லிம்" என்ற இதழை நடத்தினார்.
சிறப்பு இதழ்கள்
இந்த இதழ் மாதம் இருமுறை (ஒரு வெள்ளிவிட்டு ஒரு வெள்ளி) வெளியிடப்பட்டாலும் தேவையைக் கருத்திற்கொண்டு இடைக்கிடையே சிறப்பு இதழ்களை வெளியிட்டுள்ளது.
ஆங்கில இணைப்பு
"முஸ்லிம் பாதுகாவலன்" இதழில் ஆங்கிலப் பகுதியும் இணைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலப் பகுதிக்கு "முஸ்லிம் கார்டியன்" என்று பெயரிடப்பட்டிருந்தது.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 7, 1982)