முகம்மது அப்துல் அலி
அல்-ஹாஜ் நவாப் குலாம் முகம்மது அப்துல் அலி கான் பகதூர் (பிறப்பு 9 ஆகத்து 1951) தற்போதைய ஆற்காடு இளவரசராக பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அப்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார்.[1] இவரது குடும்பத்தினர் இரண்டாவது கலீபாவான உமறு இப்புனு அல் கத்தாபின் வழித்தோன்றல்களாவர்.[2]
ஆற்காடு இளவரசர் என்ற நிலையில் இவர் பல சமய அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தலைவராக உள்ளார். மக்கா, மதீனா நகரங்களை நிருவகிக்கும் வக்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை] அரச விழாக்களிலும் வரவேற்புகளின் போதும் ஆற்காடு இளவரசருக்கு தமிழ்நாட்டின் ஆய அமைச்சர்களுக்கு இணையான நிலை வழங்கப்படுகிறது.
மேற்சான்றுகள்
- ↑ Staff writers (1 February 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040218012719/http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm.
- ↑ Staff writers (15 August 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041222000122/http://www.hindu.com/2004/08/15/stories/2004081513680300.htm.
வெளி இணைப்புகள்
- Arcot
- House of Arcot பரணிடப்பட்டது 2010-08-11 at the வந்தவழி இயந்திரம், The Hindu, dated 1 பெப்ரவரி 2004
- Nawab Mohammed Abdul Ali பரணிடப்பட்டது 2008-01-20 at the வந்தவழி இயந்திரம்