முகமது சுல்தான் (எழுத்தாளர்)
Jump to navigation
Jump to search
முகமது சுல்தான் (எழுத்தாளர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
முகமது சுல்தான் (எழுத்தாளர்) |
---|---|
பிறந்ததிகதி | 1941 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
முகமது சுல்தான் (பி: 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மைதீ சுல்தான் எனும் புனைப் பெயரில் எழுதிவரும் இவர், மலேசிய வானொலியின் முன்னாள் கலைஞராவார். மேலும் இவர் ஒரு சிறந்த வானொலி அறிவிப்பாளரும், தயாரிப்பாளரும், விளையாட்டு வருணனைகளில் வல்லவரும், பட்டி மன்றப் பேச்சாளரும், தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் ஈடுபாடுள்ள செயலாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "மைதீ சுல்தான் கவிதைகள்" (1989);
- "மைதீ சுல்தான் சிறுகதைகள்" (1989).
பரிசில்களும், விருதுகளும்
- சா. அன்பானந்தன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2000).