மீமுரே
மீமுரே Meemure | |
---|---|
கிராமம் | |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 400 |
மீமுரே (Meemur) என்பது சுமார் 400 மக்கள் தொகையை கொண்ட இலங்கைக் கிராமம் ஆகும்.[1] இது நக்கிள்ஸ் மலைத்தொடரில் கண்டி மாவட்டத்திற்கும் மாத்தளை மாவட்டத்திற்கும் இடையிலான எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. லூல்வத்தே நகரிலிருந்து 14 கி.மீ (8.7 மைல்) பாதை வழியாக ஒரே அணுகலைக் கொண்ட இலங்கையின் மிக தொலைதூர கிராமங்களில் மீமுரே ஒன்றாகும்.[2] கிராமத்தில் செல்லுலார் சேவை எதுவும் இல்லை, ஆனால் ஒரு சிடிஎம்ஏ தொலைபேசி சேவை கிடைக்கிறது.
கிராமத்திற்கு நேரடி அஞ்சல் விநியோகம் இல்லை; ஒரு கிராமவாசி ஒவ்வொரு நாளும் தபால் சந்தியில் ஒரு தபால்காரருடன் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அஞ்சல்களை பரிமாறிக்கொள்கிறார்.[3] லேக்கலா மலை மிமுரே கிராமத்தில் உள்ளது. இக் கிராம மக்கள் மிளகு, ஏலக்காய், நெல் மற்றும் இஞ்சி பல பிரதான பயிர்களை நம்பியுள்ளனர்.[1] தலை நகரம் கொழும்பிலிருந்து மீமுரே கிராமம் சுமார் 175 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
கொழும்பில் இருந்து 7 மணி நேர பயணத்தில் மீமுரே கிராமத்தை அடையலாம். மீமுரேயை அடைய முக்கிய வழி கொழும்பிலிருந்து 116 கி. மீ தூரத்தில் உள்ள கண்டி நகரின் வழியே உள்ளது. மகியங்கனை நோக்கிய கண்டி- மகியங்கனை வீதி (A26) வழியே கண்டியில் இருந்து 35 கி. மீ தொலைவில் உள்ள ஹுன்னஸ்கிரிய சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பின்னர் ஹுன்னஸ்கிரிய சந்திப்பிலிருந்து 15 கி. மீ தொலைவில் அமைந்துள்ள லூல்வத்த கிராமத்தை அடையலாம். அங்கிருந்து 15 கி. மீ தொலைவில் மீமுரே கிராமம் அமைந்துள்ளது. உடதும்பர காவல் நிலையம் கிராமத்தை அண்டிய காவல் நிலையமாகும்.
கொழும்பிலிருந்து மீமூருக்குச் செல்லும் வழியில் ஹுலு கங்கா (நதி), விக்டோரியா நீர்த்தேக்கம், டெல்டேனியா புதிய நகரம் (விக்டோரியா அணை, மகாவேலி திட்டத்தின் பின்னால் நீர்த்தேக்கத்தை நிரப்புவதில் டெல்டெனியா வெள்ளத்தில் மூழ்கியது), தோத்தலுகலா வன மற்றும் தாவரவியல் பூங்கா, மினி வேர்ல்ட்ஸ் எண்ட், கோபெர்ட்ஸ் கேப் (அத்தலா மொட்டுவா) ஏராளமான காற்று வீசும் இடம் ஆகிய சுற்றுலா தலங்களை காணலாம். இக்கிராமமானது எந்தவொரு களைப்படைந்த பயணிக்கும் களிப்பூட்டக்கூடிய இடமாக அமையும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 "Meemure - Lifestyles". Official Website of the Government of Sri Lanka. Policy Research & Information Unit of the Presidential Secretariat of Sri Lanka. Archived from the original on 2007-12-21. பார்க்கப்பட்ட நாள் 2008-07-21.
- ↑ "Meemure - One of the most remote villages in Sri Lanka". Official Website of the Government of Sri Lanka. Policy Research & Information Unit of the Presidential Secretariat of Sri Lanka. Archived from the original on 2008-12-22. பார்க்கப்பட்ட நாள் 2008-07-21.
- ↑ "Meemure - Communication". Official Website of the Government of Sri Lanka. Policy Research & Information Unit of the Presidential Secretariat of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2008-07-21.